கோடம்பாக்கத்தின் முன்னணி நட னப் பயிற்சியாளரான பிருந்தா, இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா'. இதில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும் காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட் சித் தொகுப்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 3ஆம் தேதி வெளியீடு காணும் இப்படத்தின் பாடல்களை மதன் கார்க்கி எழுத, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில், உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக இப்படம் உருவாகி உள்ளதாகக் கூறுகிறார் பிருந்தா.
"காதல், நகைச்சுவை, இசை ஆகியவற்றின் கலவையாக இப்படம் இருக்கும். காதலையும் நட்பையும் கொண்டாடும் படைப்பு என்றும் கூறலாம்," என்கிறார் பிருந்தா.

