‘இது வால் முளைத்த இளைஞனைப் பற்றிய கதை’

'குதி­ரை­வால்' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் புதிய படம் உரு­வாகி வரு­கிறது. இரட்டை இயக்கு­நர்­கள் மனோஜ், ஷியாம் இயக்­கு­கின்­ற­னர்.

படத்­தின் குறு­முன்­னோட்­டக் காட்­சித்­தொ­குப்­பில் நாய­கன் கலை­ய­ர­ச­னுக்கு வால் முளைப்­ப­து­போல் காண்­பித்­துள்­ள­னர். இத­னால் ரசிகர்­க­ளின் படம் குறித்த எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

"இது மனித உணர்­வு­க­ளை­யும் மதிப்­பீ­டு­க­ளை­யும் பற்­றிப் பேசும் படம். திரை­யில் ஒவ்­வொரு காட்சி­யை­யும் பார்த்த பின்­னர் 'இது நம் முடைய வாழ்க்­கை­யில் நடந்­த­து­போல் இருக்­கி­றதே' என ரசி­கர்­கள் நிச்­ச­யம் நினைத்­துக்­கொள்­வார்­கள்.

"எங்­க­ளு­டைய நண்­பர் ராஜேஷ் என்­ப­வர்­தான் இந்­தக் கதை­யைக் கொண்டு வந்­தார். சவால் நிறைந்த கதைக்­க­ளம். ஆனால், கச்­சி­த­மாக பட­மாக்­கப்­பட்­டால் தமிழ் சினி­மா­வின் முக்­கிய படைப்­பு­களில் ஒன்­றாக மாறும் என்று தோன்­றி­யது.

"இதற்கு முன்பு சில குறும்­படங்­களை உரு­வாக்கி உள்­ளோம். அவற்றைப் பார்த்த பிற­கு­தான் இயக்­கு­நர் ரஞ்­சித் எங்­க­ளுக்கு இந்­தப் படத்தை இயக்­கும் வாய்ப்பை அளித்­தார்," என்­கி­றார் மனோஜ்.

"வங்­கி­யில் வேலை செய்­யும் ஒரு­வ­னுக்­குத் திடீ­ரென்று வால் முளைத்­து­வி­டு­கிறது.

"அது அவன் வாழ்க்­கையை எப்­ப­டி­யெல்­லாம் மாற்­று­கிறது என்பது­தான் கதை.

"நாயகன் கலை­ய­ர­சன் கடும் உழைப்­பைக் கொட்­டி­யுள்­ளார். வால் முளைத்த மனி­த­னாக நடிக்­கும்­போது அதற்­கேற்ற உடல்­மொழி தேவைப்­படும். இதைச் சரி­யா­கப் புரிந்­து­கொண்டு அரு­மை­யாக நடித்துள்­ளார் கலை­ய­ர­சன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!