விக்னேஷ் சிவன் இயக்கத்தில் டோனி நடிக்கவுள்ளதாக தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் டோனி நடிக்கவுள்ளதாக தகவல்

1 mins read
d1b7075e-6d65-4110-aef2-37a9858e41ba
படம்: விக்னேஷ் சிவன்/இன்ஸ்டகிராம் -

தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவில், டோனிக்கு பூங்கொத்து அளிப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

"என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம். இவருடன் நான் இருக்கும் இந்தப் புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது.

"வாழ்க்கை மிகவும் அழகானது என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இப்படியான ஒரு தருணத்தை உருவாக்கிக் கொடுத்ததற்காக, இந்தக் காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் இவரை சந்தித்தபோது, ஒரு நல்ல கதையுடன் சந்தித்தேன். விரைவில் இவருக்கு ஆக்‌ஷன் சொல்லி இவரை இயக்கும் நாள் வரும்," என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், திரைப்படத் துறையில் டோனி கால்பதிக்கவுள்ளதாக தகவல்கள் பரவிவருகின்றன. இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே டோனி நடித்துவந்த நிலையில், இதுவும் விளம்பரப் படமாகத்தான் அமையுமா அல்லது விக்னேஷ் சிவனின் வழக்கமான காதல் திரைப்படமாக அமையுமா என்பது வரும் நாள்களில்தான் தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்