முதன்முறையாக இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார் 'பாகுபலி' நாயகன் பிரபாஸ். அமிதாப்புடன் நடிப்பது ஒரு கனவு போல் இருக்கிறது என்று அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளன்று அமிதாப் சார் வந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கைதட்டி அவரை வரவேற்றோம். அவருடன் நடிக்கவேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? எனக்கும் அந்தக் கனவு இருந்தது. அது இப்போது நிறைவேறியதில் மகிழ்ச்சி," என்று குறிப்பிட்டு 'தீவார்' இந்திப் படத்தில் அமிதாப் இடம்பெறும் ஒரு காட்சியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் பிரபாஸ்.
இந்திப் படம் ஒன்றில் 'பவுன்சர்' எனப்படும் பாது காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா.
படத்துக்குப் 'பப்ளி பவுன்சர்' என்று தலைப்பு வைத்துள்ள னர். ஒரு பெண் பாதுகாவலர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கதையை உருவாக்கி உள்ளனர். மது பண்ட்ராக்கர் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ஒருசேர வெளியாகிறது. நாயகியை முன்னிலைப்படுத்தி இந்தப் படம் மூன்று மொழிகளில் வெளியாவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்பதாகச் சொல்கிறார் தமன்னா.
ரஜினியின் 169வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்நிலையில் அவரது 170வது படத்தை இயக்கும் வாய்ப்பு அருண்ராஜாவுக்கு கிடைத்திருக் கிறது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். போனி கபூரும் அருண்ராஜாவும் கடந்த வெள்ளிக்கிழமை ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது 'வலிமை' படத்தை நேர்த்தியாக தயாரித்தமைக்காக போனி கபூரை பாராட்டினாராம் ரஜினி.
, :

