'தமிழ்ப் பெண்களை மதியுங்கள்'

'தமிழ்ப் பெண்களை மதியுங்கள்'

3 mins read
f758c3d0-d8dd-4d6c-9fb1-80ace7ddeec9
-

பிரியா ஆனந்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி 12 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இன்­னும்­கூட கதா­நா­ய­கி­யாக மட்­டுமே நடித்து வரு­வதை பெரு­மைக்­கு­ரிய விஷ­ய­மா­கக் கருது­வ­தா­கச் சொல்­கி­றார் பிரியா.

இந்­நி­லை­யில், பிர­சாந்த் ஜோடி­யாக இவர் நடித்­துள்ள 'அந்­த­கன்' ('அந்தாகூன்' இந்தித் திரைப் படத்தின் மறுபதிப்பு) திரைப்­ப­டம் விரை­வில் திரை­காண உள்­ளது. மேலும், 'காசே­தான் கட­வு­ளடா' படத்­தின் மறு­ப­திப்­பி­லும் நடித்து வரு­கி­றார்.

தொடர்ந்து நாய­கி­யாக மட்­டுமே நடித்து வரு­வ­தன் ரக­சி­யம் என்ன என்று ரசி­கர்­கள் அவ்­வப்­போது கேட்­கி­றார்­க­ளாம். இதில் ரக­சி­யம் என்று எது­வும் இல்லை என்­கி­றார்.

"எனக்­கான பொருத்­த­மான கதா­பாத்­தி­ரங்­களைத் தேர்வு செய்­கி­றேன். தேடி வரும் வாய்ப்பு­களை மட்­டுமே ஏற்­கி­றேன். எனக்கு வாய்ப்பு கொடுங்­கள் என்று யாரை­யும் தேடிச் சென்றதும் இல்லை.

"என் அழகு ரக­சி­யம் என்­ன­வென்­றும் சிலர் கேட்­கி­றார்­கள். அதற்­காக நான் மெனக்­கெ­டு­வது இல்லை. என்­னு­டைய பாட்டி சத்­தான உணவு வகை­களைச் சமைத்­துக் கொடுக்­கி­றார். ஒரு­வேளை இது ஒரு கார­ண­மாக இருக்­க­லாம். கதா­நா­ய­கர்­கள் எப்­போ­துமே உடல்­ந­ல­னில் கவ­னம் செலுத்­து­வார்­கள். நல்ல சம்­ப­ளம், கை நிறைய வாய்ப்­பு­கள் இருப்­ப­தால் மன­த­ள­வில் நிம்­ம­தி­யா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் இருக்­கி­றார்­கள். கதா­நா­ய­கி­களும் இதைப் பின்­பற்றி­னால் ரசி­கர்­கள் ஏற்­றுக்­கொள்­வார்­கள்.

"திரு­ம­ணம் ஆகி­விட்­டால் நடிகை­களை ரசி­கர்­கள் ஒதுக்­கி­வி­டு­வார்­கள் என்­ப­தெல்­லாம் பழங் கதை. திறமை உள்ள நடி­கை­களுக்கு ரசி­கர்­க­ளின் ஆத­ரவு எப்­போ­தும் இருக்­கும்," என்று சொல்­லும் பிரியா, தமிழ் பேசத் தெரிந்த நடி­கை­க­ளுக்கு கோடம்­பாக்­கத்­தி­னர் முன்­னு­ரிமை அளிக்கவேண்­டும் என்­கி­றார்.

தமிழ்ப் பெண்­கள் சிறப்­பாக நடிப்­ப­தா­கக் குறிப்­பி­டு­பவர், வட இந்­தி­யா­வில் இருந்து கதா­நா­ய­கி­களை இறக்­கு­மதி செய்­யும் கலா­சா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­கி­றார்.

"அழ­கான தமிழ்ப் பெண்­கள் பலர் தமிழ்ப் படங்­களில் நடிக்க காத்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் அவர்­களை யாரும் கண்டு­கொள்­வ­தில்லை. இன்­ற­ள­வும் இயக்­கு­நர்­களும் தயா­ரிப்­பா­ளர்­களும் புது நாய­கி­களை வட­இந்­தி­யா­வில்­தான் தேடு­கி­றார்கள். இதை முத­லில் நிறுத்தவேண்­டும். தமிழ்ப் பெண்களை மதிக்க வேண்டும்," என்று கோபத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றார் பிரியா.

'அந்தகன்' படம் தமிழ் ரசிகர்களால் நிச்சயம் கொண்டாடப்படும் என்று குறிப்பிடுபவர், தமக்கும் பிரசாந்துக்கும் இப்படம் நல்ல திருப்புமுனையாக அமையும் என்கிறார்.

"அந்தகன்' படத்தின் கதைதான் அதன் பலம். ஏற்கெனவே இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

"தமிழில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் படத்தின் இயக்குநர் தியாகராஜன் உறுதியாக உள்ளார். யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்ற சூட்சமத்தை நன்கு அறிந்தவர் அவர். அதனால் படத்தில் நடிக்கும் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்தோம். கதைப்படி நானும் பிரசாந்தும் காத லர்களாக நடிக்கிறோம்," என்கிறார் பிரியா.

இந்தப் படத்தில் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, கே‌எஸ் ரவிகுமார், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளார் இயக்குநர். அதனால் படப்பிடிப்பு என்பது ஒரு திருவிழாவைப் போல் நடந்ததாம்.

"பிரசாந்தைப் பொறுத்தவரை அவர் இப்போது காதல் நாயகன்தான். அவர் என்றுமே இளமை யாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'கண்ணெதிரே தோன்றினாள்' படத்தில் பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறார். 'அந்தகன்' படம் வெளியான பிறகு மீண்டும் ஒரு வெற்றிவலம் வருவார் என நம்புகிறேன்.

"மொத்த படத்தையும் முடித்த பிறகு ஒருநாள் படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பார்த்தோம். உண்மையாகவே நான் மிரண்டு போனேன். அந்த அளவுக்கு மிக நேர்த்தியான படைப்பாக உருவாக்கி உள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்," என்று சொல்லும் பிரியா, அடுத்து மிர்ச்சி சிவா ஜோடியாக நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான 'காசேதான் கடவுளடா' படத்தின் மறுபதிப்பில் சிவாதான் நாயகன். அவருடன் இணைந்து நடிப்பது சுவாரசியமான அனு பவத்தை தரும் என்கிறார்.

"சிவாவும் நானும் கோடம்பாக்கத்தில் வெற்றி ஜோடியாக கருதப்படுகிறோம். அவருடன் 'வணக்கம் சென்னை', 'சுமோ' ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அவரது நேர்த்தியான, அலட்டிக் கொள்ளாத, ஆபாசமில்லா நகைச்சுவைக்கு நானும் ஒரு ரசிகை," என்கிறார் பிரியா ஆனந்த்.