சுசீந்திரன்: இசை ஞானத்தை ஒளித்து வைத்திருந்தார் ஜெய்

நடி­கர் ஜெய் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மாகி உள்ள படம் 'வீர­பாண்டி­ய­பு­ரம்'. இது அவர் நடித்­துள்ள முப்­ப­தா­வது படம். சுசீந்­திரன் இயக்கி உள்­ளார்.

"ஜெய் நல்ல இசை ஞானம் உள்­ள­வர், நல்ல இசை­ய­மைப்­பா­ளர் என்­பதை முன்பே அறி­வேன். ஆனால் இது­கு­றித்து அவர் அதிகம் பேச­மாட்­டார்.

"ஒரு கட்­டத்­தில் நான்­தான் வலிய சென்று என் படத்­துக்கு இசை­ய­மைக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டேன்.

'வீர­பாண்­டி­ய­பு­ரம்' படத்­தின் கதையை நான் முத­லில் ஜெய்­யிடம் சொல்­ல­வில்லை. கதையை எழுதி­ய­தும் நான்­கைந்து நாய­கர்­க­ளி­டம் சொன்­னேன்.

"எதற்­கும் இருக்­கட்­டுமே என்று ஒரு­நாள் ஜெய்­யை­யும் தொடர்பு கொண்டு கதை சொல்ல வரட்­டுமா என்று கேட்­ட­போது, அவர் அதெல்­லாம் தேவையே இல்லை என்­றார். உங்­கள் படம் என்­றால் கதை கேட்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று கூறி­விட்­டார்.

"நீ்ண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு அவர் நடித்­துள்ள படம் இது. மேலும், இசை­ய­மைப்­பா­ள­ராகவும் அவரை அறி­மு­கப்­ப­டுத்­தும் படம். எனவே 'வீர­பாண்­டி­ய­பு­ரம்' படத்­தின் வெற்­றியை உறுதி செய்­யும் பொறுப்­பை­யும் நான் சுமக்க வேண்­டி­யி­ருந்­தது," என்­கி­றார் சுசீந்­தி­ரன்.

'வீர­பாண்­டி­ய­பு­ரம்' அண்­மை­யில் வெளி­யாகி விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து இசை­ய­மைப்­பா­ள­ரா­க­வும் புதுப்­ப­ய­ணத்தைத் தொடங்கி உள்­ளார் ஜெய்.

"ஜெய் இசை­ய­மைத்­துள்ள விதம் கண்டு வியப்­பின் உச்­சத்­தில் இருக்கிறேன். அவ­ருக்­குள் இப்­ப­டி­யொரு திறமை இருக்­கிறது என்­பதை இன்­னும் என்­னால் நம்ப முடி­ய­வில்லை.

"அதி­லும் இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்ள 'காட முட்ட...' பாட­லைக் கேட்டு அசந்து போனேன். இவ்­வ­ளவு நாள் இந்தத் திற­மையை ஏன் ஒளித்து வைத்­தீர்­கள் என்று அவ­ரி­டம் கடிந்து கொண்­டேன்.

"அவ­ரு­டன் இணைந்து உரு­வாக்­கிய 'குற்­றம் குற்­றமே' படத்­தின் பணி­களை 26 நாள்­களில் முடித்­தோம்.

"இப்­போது 'வீர­பாண்­டி­ய­பு­ரம்' படத்­தை­யும் திட்­ட­மிட்டபிட முடித்­தி­ருக்­கி­றோம் என்­றால் அதற்கு ஜெய்­தான் கார­ணம்," என்று பாராட்­டித் தீர்க்­கி­றார் இயக்கு­நர் சுசீந்­தி­ரன்.

தாம் அடுத்து இயக்­கும் படங்­க­ளி­லும் ஜெய் இசை­ய­மைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்ற வாய்ப்­புண்டு என்று குறிப்­பி­டு­ப­வர், மற்ற படங்­களுக்­கும் ஜெய் இசை­ய­மைத்­தால் நன்­றாக இருக்­கும் என்­கி­றார்.

"நம்மிடம் உள்ள திறமையை வீணடித்துவிடக் கூடாது. உரிய நேரத்தில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும," என்கிறார் சுசீந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!