சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, ஏதாவது வித்தியாசமாக செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் கெட்டிக்காரர். தற்போது '96' படத்தில் நாயகி திரிஷா ஏற்று நடித்த ஜானு கதாபாத்திரத்தைப் போன்று உடையணிந்து, எளிமையான ஒப்பனையுடன் காட்சி அளிக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள் பலர், 'திரிஷாவைப் போன்றே அழகாக இருக்கிறீர்கள்' என்று பின்னூட்டமிட்டுள்ளனர். முக்கியமாக, திரிஷா இந்தப் படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். மேலும்... "ஹா ஹா ஹா... லவ்" என்றும் குறிப்பிட்டுள்ளார். திரிஷா இவ்வாறு பின்னூட்டமிட்டது பிரியங்காவை உற்சாகப்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் 'வாஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதன் முதல்தோற்றச் சுவரொட்டி வெளியாகி உள்ளது. இதில் கீர்த்தியும், பட நாயகன் டொவினோ தாமசும் வழக்கறிஞர்களாக நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த முதல்தோற்றச் சுவரொட்டி, சூர்யா நடித்து வெற்றிபெற்ற 'ஜெய் பீம்' படத்தின் காட்சியைப்போல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ராகவ் இயக்கியுள்ள 'வாஷி' கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படமாக உருவாகிறது. கீர்த்தியின் மூத்த சகோதரி இதைத் தயாரிக்கிறார்.
அண்மையில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதன் பின்னர் டோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். தமது டுவிட்டர் பதிவில், "டோனியை வைத்து நான் 'ஆக்ஷன்' என்று சொல்லி அவரை இயக்க வேண்டும். இதற்கான ஒரு நல்ல கதை விரைவில் உருவாகும்," என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ்.
சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்துவது, ஆங்கிலப் படத்துக்கு இசையமைப்பது என்று பரபரப்பாகப் பணியாற்றி வரும் இளையராஜா, அடுத்து 'ஹவ் டூ நேம் இட்' இசைத்தொகுப்பின் இரண்டாம் பாகத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். "திரைப்படங்களில் பாகம் 1, பாகம் 2 என்று உருவாக்கு கிறார்கள். அப்படியானால் ஏன் இசைத்தொகுப்புக்கும் இரண்டாம் பாகத்தை வெளியிடக்கூடாது? இதுகுறித்து நீண்ட நாள்களாக யோசித்து வந்தேன். அதன் முடிவில் எனது இசைத்தொகுப்பின் இரண்டாவது பாகத்தை வெளியிட முடிவு செய்துள்ளேன்," என்று இளையராஜா அறிவித்துள்ளார்.
பாடலாசிரியர் லலிதானந்த மாரடைப்பால் காலமானார். நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் லலிதா னந்த். 'ரவுத்திரம்' படத்தில் இடம்பெற்ற 'அடியே உன் கண்கள் இரண்டும்', விஜய் சேதுபதி இயக்கத்தில் வெளியான 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் இடம்பெற்ற 'உன் வீட்டுல நான் இருந்தேனே' உள்ளிட்ட பாடல்கள் அவருக்கு மேலும் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தன. அண்மைக்கால Sமாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
, : ல் சாதனம்

