2022ஆம் ஆண்டுக்கான 'தாதாசாஹேப் பால்கே' அனைத்துலக திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்முறை 'புஷ்பா' சிறந்த படமாகத் தேர்வு பெற்றுள்ளது.
ரூ.250 கோடி செலவில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'புஷ்பா' படம் தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வசூல் செய்தது. வசூலை அள்ளிய கையோடு இப்போது விருதுகளையும் அள்ளத் தொடங்கி உள்ளது. சிறந்த படத்துக்கான விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக 'புஷ்பா' படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

