நாட்டுப்புறப் பாடலுக்கு கீர்த்தி குத்தாட்டம்

நாட்டுப்புறப் பாடலுக்கு கீர்த்தி குத்தாட்டம்

1 mins read
0edd2be6-ce50-4d23-8ae4-0ba451eaacd8
'காந்தாரி' பாடலில் கீர்த்தி சுரேஷ். -

'காந்­தாரி' என்ற தலைப்­பில் உரு­வா­கும் ஓர் இசைத்­தொ­குப்­பில் இடம்­பெற்­றுள்ள பாட­லுக்கு அசத்­த­லாக நட­ன­மாடி உள்­ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்­தப் பாட­லுக்­கான முதல்­தோற்றச் சுவ­ரொட்டி அண்­மை­யில் வெளி­யா­னது. அதைக் கண்ட கீர்த்தி­யின் நண்­பர்­கள், ஏதே­னும் திரைப்­ப­டத்­தில் இந்­தப் பாடல் இடம்­பெ­று­கி­றதா என்று விசா­ரித்­தார்­களாம்.

இப்­பா­ட­லுக்கு பவன் இசை­அமைக்க, பிருந்தா மாஸ்­டர் நடனம் அமைத்­துள்­ளார்.

"முதன்­மு­றை­யாக ஒரு நாட்­டுப்­பு­றப் பாட­லுக்கு நட­ன­மாடி உள்­ளேன். இது­போன்ற பாட­லுக்கு நட­ன­மாட வேண்­டும் என்­பது எனது நீண்ட நாள் ஆசை.

"எனது நட­னத்­தில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக உணர்கி­றேன். பிருந்தா மாஸ்­டர்தான் எனது முதல் நடன ஆசி­ரியை. எனக்கு எந்­த ­வகை நட­னம் ஒத்துவரும் என்­பதை நன்கு அறிந்­த­வர் அவர்.

"அவ­ரு­டன் இணைந்து பணியாற்­றும்­போது நம்­மி­டம் உள்ள திற­மையை முழு­மை­யாக வெளிக்­கொண்டு வரு­வார். அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­று­வது இனிய அனு­ப­வ­மாக இருக்­கும்.

"திரைப்­ப­டத்­துக்­காக ஒரு பாடலை எப்­ப­டிப் பட­மாக்­கு­வார்­களோ, அப்­ப­டித்­தான் 'காந்­தாரி' பாட­லும் பட­மாக்­கப்­பட்­டது.

"இதுபோன்ற வாய்ப்புகள் அதிக உற்சாகம் தரும்," என்­கி­றார் கீர்த்தி.