'மழை பிடிக்காத மனிதன்'

'மழை பிடிக்காத மனிதன்'

3 mins read
59ed267b-3492-44eb-bc13-02639c224542
-

'மழை பிடிக்­காத மனி­தன்' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பு­டன் கள­மி­றங்கி உள்­ளார் இயக்­கு­நர் விஜய் மில்­டன். தலைப்­புக்­கேற்ப கதை­யும் வித்­தி­யா­ச­மா­ன­தாக இருக்­கும் என்­கி­றார்.

விஜய் ஆண்­ட­னி­தான் இந்­தப்­ப­டத்­தின் கதா­நா­ய­கன். அவரும் இயக்­கு­ந­ரும் பதி­னைந்து ஆண்­டு­கால நண்­பர்­கள். எனி­னும் திரை­யு­ல­கில் நுழைந்­த­தும் வெவ்­வேறு திசை­களில் பய­ணம் செய்த பின்­னர் இப்­போது கூட்­டணி அமைத்­துள்­ள­னர்.

"மன­சுக்கு நெருக்­க­மான இந்­தக் கதை­யு­டன் சில காலம் அலைந்து கொண்டே இருந்­தேன். நீங்­கள் விவ­சா­யியா, மண்­பாண்­டம் செய்­கி­ற­வரா, உங்­கள் வியா­பா­ரம் குடை விற்­பதா, உப்பு விற்­பதா என்­ப­தைப் பொறுத்­து­தான் உங்­க­ளுக்கு மழை பிடிக்­குமா, பிடிக்­காதா என்­பது தெரி­யும்.

"ஆனால் மழைக்கு இது எது­வுமே தெரி­யாது. அது தன் போக்­கி­லே­யே­தான் இருக்­கும். மழை பிடிக்­கா­த­வர்­களும் இருப்­பார்­களா என்ற கேள்விக்குறி இந்­தத் தலைப்­பில் இருக்­கிறது.

"எல்­லோ­ருக்­கும் பிடிக்­கும் ஒரு விஷ­யம், ஒருத்­த­னுக்­குப் பிடிக்­கா­மல் போகும் என்­றால் அவ­னுக்கு என்­ன­வெல்­லாம் நடந்­தி­ருக்­கும் என்று யோசிக்க வேண்­டி­யி­ருக்­கும்.

"இந்த மழை என்­னென்ன நினை­வு­க­ளைக் கொண்டு வந்து சேர்க்­கும், அவை நம்மை என்­ன­வெல்­லாம் செய்­யும் என்று நிறைய கேள்­வி­களும் உள்­ளன," என்­கி­றார் விஜய் மில்­டன்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு விஜய் ஆண்­ட­னியை சந்­தித்­த­போது அவ­ரி­டம் இந்­தக் கதை­யைச் சொல்லி இருக்­கி­றார் விஜய் மில்­டன். அது பிடித்­துப்­போ­கவே உட­ன­டி­யாக பட வேலை­களைத் தொடங்­கச் சொல்­லி­விட்­டா­ரம் ஆண்­டனி.

"இந்­தப் படத்­தில் கதைப்­படி இறுக்­க­மும் கோப­மும் உள்ள மனி­த­ராக திரை­யில் தோன்­று­வார். இத்­தனை ஆண்­டுக்­கால அனு­ப­வத்­தில் ஆண்­ட­னி­யால் நிறைய மாற்­றங்­களை நடிப்­பில் கொண்டு வர முடி­கிறது.

"இவர் நிச்­ச­ய­மாக பதி­னைந்து ஆண்டு­க­ளுக்கு முன்பு எனக்கு அறி­மு­க­மான ஆண்­டனி இல்லை. இது அதி­ரடி சண்­டை­கள் நிறைந்த படம்­தான். ஒரு மனி­த­னின் மனசைத் தோண்­டி­னால் அதில் மகிழ்ச்சி­யும் துக்­க­மும் கொப்­ப­ளிக்­க­லாம்.

"ஆனால் சில சம­யங்­களில் திரா­வ­கம் ஓடும் சூழ்­நி­லை­களும் உள்­ளன. அதை­யும் நாம் அறி­வோம். அப்­ப­டிப்­பட்ட இடங்­க­ளி­லும் அரு­மை­யாக நடித்­துள்­ளார் ஆண்­டனி. அவர் அமை­தியாக வந்து நிற்­பார். களத்­தில் இறங்­கி­விட்­டால் அவ­ரி­டம் இருந்து வெளிப்­படும் உணர்­வு­கள் அசர வைக்­கும்.

"அனைத்­தை­யும்­விட அவர் என் மீது வைத்­துள்ள நம்­பிக்கை இந்­தப் படத்­தின் வெற்­றிக்கு தூண்­டு­கோ­லாக இருக்­கிறது," என்று சொல்­லும் விஜய் மில்­டன், படத்­தின் நாயகி மேகா ஆகா­ஷை­யும் பாராட்ட மறக்­க­வில்லை.

மேகாவுக்கு ஏற்ற அரு­மை­யான கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­பவர், கதை­யைக் கேட்ட உட­னேயே பிரி­யத்­தோடு நடிக்க ஒப்­புக் கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"நான் சொன்ன கதை மீது அவ­ருக்கு மிகுந்த நம்­பிக்கை ஏற்­பட்­டது. இது எளிய மனி­தர்­க­ளின் கதை­தான்.

"நாம் தேடிக்­கொள்­ளும் வாழ்க்கை, வந்து சேர்­கிற காதல், செய்த தவறு, அத­னால் கிடைக்­கிற வேதனை என்று நம் உல­கம் இயங்­கிக் கொண்டி­ருக்­கிறது.

"அப்­ப­டிப் புரட்­டிப் போட்ட வாழ்க்­கை­யில் பொருந்­து­கிற கதா­பாத்­தி­ரத்­தில் வரு­கி­றார். மேகா­வி­டம் உள்ள திற­மைக்கு அவர் இந்­நே­ரம் பல உய­ரங்­க­ளைத் தொட்­டி­ருக்க வேண்­டும். இந்­தப் படத்­தில் அவரது நடிப்பு பேசப்­படும்.

"இயல்­பாக நடிக்­கக்­கூ­டிய கதா­நா­ய­கி­கள் கிடைப்­பது அரிது. மேகாவை அந்­தப் பட்­டி­ய­லில் தயக்­க­மில்­லா­மல் சேர்க்­க­லாம்.

"தங்கை வேடத்­தில் நடித்­துள்ள பிர­ணதி, அம்­மா­வாக வரும் சரண்யா என அனை­வ­ருக்­கும் நல்ல பெயர் கிடைக்­கும்.

"பெரும் பொருள்­செ­ல­வில் தயா­ரித்த தனஞ்­செ­யன், கமல் போரா, பிர­தீப் இவர்­க­ளுக்கு நான் கட­மைப்­பட்­டி­ருக்­கேன்," என்­கி­றார் விஜய் மில்­டன்.

படம் சிறப்பாக உருவாகி உள்ளதாக விஜய் ஆண்டனி பாராட்டியது இயக்குநருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாகத் தகவல்.