'இதுவும் கடந்து போகும்'

'இதுவும் கடந்து போகும்'

1 mins read

இந்­தி­யா­வி­லும் உல­கெங்­கி­லும் உள்ள சுமார் நான்­கா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட திரை­ய­ரங்­கு­களில் நேற்று அதி­காலை வெளி­யா­னது அஜித்­தின் 'வலிமை' திரைப்­ப­டம்.

சென்­னை­யில் வழக்­கம்­போல் திரை­ய­ரங்கிற்கு வெளியே வைக்­கப்­பட்­டுள்ள அஜித்­தின் பிரம்­மாண்ட பதா­கை­க­ளுக்கு ரசி­கர்­கள் பால் அபி­ஷே­கம் செய்து படத்தை வர­வேற்­ற­னர்.

நடி­கர்­கள் அருண் விஜய், பிரேம்ஜி, இயக்­கு­நர் வெங்­கட்­பி­ரபு உள்­ளிட்­டோர் முதல் நாள் முதல் காட்­சி­யைப் பார்த்­த­தா­கத் தக­வல்.

திரை­ய­ரங்­கில் ரசி­கர்­கள் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்து திரை­ய­ரங்க நுழை­வுச் சீட்­டைப் பெற்­றுச் செல்­கி­றார்­கள். ஞாயிற்­றுக்­கி­ழமை வரை முன்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. படம் தயா­ரிப்­பா­ள­ருக்கு பெரும் லாபத்தை ஈட்­டித்­தரும் என்று தக­வல்­கள் வெளி­யான நிலை­யில், அஜித்தை சந்­தித்­தா­ராம் இயக்­கு­நர் வினோத். அப்­போது, "இந்த வர­வேற்­பு என்­ன­வி­த­மான உணர்­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன," என்று கேட்­டுள்­ளார்.

அதற்கு, "இது­வும் கடந்து போகும். நம்­மைச் சுற்றி நடக்­கும் எது­வுமே நிரந்­த­ரம் அல்ல. நல்­ல­தும் சரி, கெட்­ட­தும் சரி.. எது­வும் நிரந்­த­ர­மில்லை என்ற நினைப்­பு­டன் வாழத் தொடங்­கி­னால் வாழ்க்கை சிறப்­பாக இருக்­கும்," என்­று அஜித் தத்துவார்த்தமாக அளித்த பதிலைக் கேட்டு தாம் அசந்து போனதாகச் சொல்கிறார் இயக்குநர் வினோத்.