விரைவில் மோதப்போகும் கமல், விஜய் சேதுபதி

விரைவில் மோதப்போகும் கமல், விஜய் சேதுபதி

1 mins read
b2501e88-e5f4-4a0a-99ac-109bdef9cffb
-

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் கமல், விஜய் சேது­பதி, பகத் ஃபாசில் ஆகிய மூவ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து வரும் படம் 'விக்­ரம்'.

இதன் இறு­திக்­கட்ட படப்­பிடிப்பு சென்­னை­யில் நடை­பெற உள்­ளது.

தனது படங்­களில் நாய­க­னை­யும் வில்­ல­னை­யும் இறு­திக்­கட்­டத்­தில்­தான் சந்­திக்க வைப்­பார் லோகேஷ். 'விக்­ரம்' படத்­தி­லும் அப்­ப­டித் தானாம்.

கம­லும் சேது­ப­தி­யும் தங்­க­ளுக்­கு­ரிய தனிக் காட்­சி­களில் நடித்து முடித்­து­விட்­ட­னர். இதை ­ய­டுத்து இரு­வ­ரும் நேருக்கு நேர் மோதும் காட்­சி­களும் கார­சாரமாகப் பேசும் வசனங்களும் பட­மாக்­கப்­பட உள்­ளன. பகத் ஃபாசில் இதில் வில்­லனா அல்­லது நாய­க­னின் நண்­பனா என்­பது தெரி­ய­வில்லை.

ஓய்­வு­பெற்ற காவல்­துறை அதி­காரி ஒரு­வர் மேற்­கொள்­ளும் ரக­சிய நட­வ­டிக்­கை­யின்­போது எதிர்­கொள்­ளும் ஆபத்து­களை அவர் எப்­ப­டிச் சமா­ளிக்கி­றார் என்­ப­து­தான் கதை­யாம்.

மார்ச் மாத தொடக்­கத்­தில் படப்­பி­டிப்பை முடித்து ஏப்­ரல் 28ஆம் தேதி படத்தை வெளி­யி­ட படக்குழுவினர் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.