'நாயகியாக மட்டுமே நடிப்பேன்'

'நாயகியாக மட்டுமே நடிப்பேன்'

1 mins read
ecc1d9ca-79f8-4f0a-bdc8-ee814ae1d4ee
-

இரண்டு குழந்­தை­க­ளுக்­குத் தாயான பிற­கும் தம்­மால் கதா­நா­ய­கி­யாக மட்டுமே நடிக்க முடி­யும் என்று கறாராகச் சொல்­கி­றார் சினேகா.

தாம் இன்­னும்­கூட வசீ­க­ர­மா­க­வும் அழ­கா­க­வும் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், தனது அழ­குச் சிரிப்­பும் இன்­னும் மாற­வில்லை என்­கி­றார்.

"கதா­நா­ய­கி­யாக மட்­டுமே நடிப்பது என்­பது எனது விருப்­பம். இதில் குறை­காண ஒன்­றும் இல்லை. வாய்ப்பு இல்லை என்­றால் வீட்­டில் சும்மா இருப்­பேன்," என்று சொல்­லும் சினே­கா­வின் பேச்­சில் உறுதி தெரி­கிறது.

இவர் இப்­படி என்­றால் முன்­னாள் நாயகி பூமி­கா­வின் முடிவு இதற்கு நேர்­மா­றாக உள்­ளது.

கதா­நா­ய­கி­யாக நடித்­த­வர் இப்­போது நாய­கி­யின் அம்­மா­வாக நடிக்க முன்­வந்­துள்­ளார்.

மலை­யா­ளத்­தில் தயா­ரா­கும் 'பட்டர்­ஃபிளை' என்ற படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடிக்­கும் அனு­பமா பர­மேஸ்­வ­ர­னுக்கு அம்­மா­வாக நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம் பூமிகா. விஜய், சூர்­யா­வுக்கு ஜோடி­யாக வந்­த­வர், தற்­போது இப்­ப­டி­யொரு கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பது ரசி­கர்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

"தாய், மகள் பாசத்தை மைய­மாக வைத்து இந்­தப் படம் தயா­ரா­கிறது. எனவே இப்­ப­டிப்­பட்ட கதை­யில் நடிப்­ப­தற்கு தயங்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இது­வும் நாய­கிக்கு இணை­யான கதா­பாத்­தி­ரம்­தான்," என்­கி­றார் பூமிகா.

இதற்­கி­டையே, 'அழகி' பட நாயகி நந்­திதா தாஸ் புதுப்­ப­டம் ஒன்­றில் புரட்சி­கர ஆசி­ரியை கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க உள்­ளார். இந்­தப் படத்தை தங்கர்­பச்­சான் இயக்­கு­கி­றார்.