டோனி புத்தகத்தை வெளியிட்ட ரஜினி

டோனி புத்தகத்தை வெளியிட்ட ரஜினி

1 mins read
929d6982-a843-4a4e-91bf-73cca094cd7a
புத்தகத்தை வெளியிட்ட ரஜினி. -

இந்­திய கிரிக்­கெட் அணி­யின் முன்­னாள் தலை­வர் மகேந்­தர் சிங் தோனி 'அதர்வா: தி ஒரி­ஜின்' என்ற கிரா­ஃபிக்ஸ் நாவ­லில் கதா­நா­ய­கனாக சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தக் கதை­யில் இடம்­பெற்று­உள்ள 'சூப்­பர் நாய­கன்' கதா­பாத்­தி­ரத்­துக்கு தோனி­யின் உரு­வம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நாவ­லுக்­கான முதல்­தோற்­றச் சுவ­ரொட்­டியை அவரே அண்மை­யில் தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் வெளி­யிட்­டி­ருந்­தார்.

வர­லாற்­றுக் கதையைப் பின்­னணி­யாகக் கொண்ட இந்த நாவ­லுக்­காக 150 ஓவி­யங்­கள் வரை­யப்­பட்­டன. தோனி­யின் தோற்­றத்­துக்கு ரசி­கர்­க­ளி­டையே மத்­தி­யில் பெரும் வர­வேற்பு கிடைத்­தது.

இந்நிலையில், தோனியின் 'அதர்வா: தி ஒரிஜின்' என்ற கிராஃபிக்ஸ் நாவல் புத்தகத்தின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் வெளியானது.