வசூலில் சாதனை புரியும் 'வலிமை' படம்

வசூலில் சாதனை புரியும் 'வலிமை' படம்

1 mins read
29829af9-1513-46e2-909d-6ec8da6b7fe5
'வலிமை' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அஜித். -

அஜித் நடித்­துள்ள 'வலிமை' திரைப்­ப­டம் தமி­ழ­கத்­தில் மட்­டும் முதல் நாளன்று ரூ.36 கோடி ரூபாய் வசூ­லித்­துள்­ள­தா­கத் தக­வல். சென்­னை­யில் மட்­டுமே அதன் வசூல் ரூ.1.82 கோடி­யாம்.

இது­வரை வெளி­யான அஜித் படங்­களில் ஆக அதி­க­மான வசூ­லைக் கண்­டுள்ள படம் இது­தான் என்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, 'அண்­ணாத்த', 'மாஸ்­டர்' ஆகிய படங்­க­ளின் முதல்­நாள் வசூல் சாத­னை­யை­யும் 'வலிமை' படம் முறி­ய­டித்­துள்­ள­தாக ரசி­கர்­கள் மத்­தி­யில் பேசப்­ப­டு­கிறது.

வெளி­நா­டு­களில் சிறப்­புக் காட்சி­க­ளின் மூலம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வசூல் கண்­டுள்­ள­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

விறு­வி­றுப்பை அதி­க­ரிக்க படத்­தில் இருந்து 12 நிமி­டங்­கள் ஓடக்­கூ­டிய காட்­சி­களை நீக்­கி­யுள்­ள­னர். இந்­நி­லை­யில், வழக்­கம்­போல் இப்­ப­டத்­தின் வசூல் குறித்து அஜித், விஜய் ரசி­கர்­கள் மத்­தி­யில் சமூக ஊட­கங்­களில் மோதல் வெடித்­துள்­ளது.

'வலிமை' படம் வசூ­லில் சாதிக்­க­வில்லை என்று விஜய் ரசி­கர்­களும் தமிழ்த் திரை­யு­ல­கில் வசூல் அள­வில் முத­லி­டம் அஜித்­துக்­குத்­தான் என்று அவ­ரது ரசி­கர்­களும் சமூக ஊட­கங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.