ரெஜினா: இந்த நிலைமை மாற வேண்டும்

ரெஜினா: இந்த நிலைமை மாற வேண்டும்

1 mins read
e1a501c5-3050-4a0b-9f9a-247f0d64969c
-

இந்தி உள்­ளிட்ட வட­இந்­திய திரை­ உ­ல­கைச் சேர்ந்­த­வர்­கள் தமிழ், தெலுங்கு உள்­ளிட்ட மொழி­களில் இருந்து வரு­ப­வர்­களை தென்­னிந்­திய நடி­கர்­கள் என்று குறிப்­பி­டு­வது மன வருத்­தம் தரு­வ­தாக நடிகை ரெஜினா கூறி­யுள்­ளார்.

இவ்­வாறு முத்­திரை குத்­தா­மல் பொது­வாக இந்­திய நடி­கர்­கள் என்று குறிப்­பிட வேண்­டும் என்றும் அவர் வலி­யு­றுத்­து­கி­றார்.

"இவர்­க­ளால் தென்­னிந்­திய நடி­கர்­கள் என்று அழைக்­கப்­ப­டு­பவர்­க­ளின் படங்­கள், தற்­போது அனைத்து மொழி­க­ளி­லும் வெளி­யா­கின்­றன. எனவே, அடுத்த சில ஆண்­டு­களில் தென்­னிந்­திய நடிகர்­கள், இந்தி நடி­கர்­கள் என்று பிரித்து பார்க்­கும் நிலைமை இருக்­காது.

"எனி­னும் இப்­போதே வட­இந்தி­யா­வில் உள்ள கலை­ஞர்­கள் தங்­களை மாற்­றிக்­கொள்ள வேண்­டும். தென்­னிந்­திய நடி­கர்­கள் என்று அவர்கள் திரும்­பத் திரும்­பச் சொல்­வதைக் கேட்க முடி­கிறது. அப்­படிப் பேசக்­கூ­டாது என்று அவர்­களைக் கடு­மை­யாக கண்­டிக்­க­வும் தோன்­று­கிறது," என்­கி­றார் ரெஜினா. இவர் தற்போது இணையத்தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.