வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படம்

வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படம்

1 mins read
d71ab25d-1f3a-4cbc-bd0c-a1d705d3ff1c
-

நடிக்க வாய்ப்பு இல்லை என்றால் நடிகைகள் செய்யும் முதல் வேலை தங்களது அண்மைய கவர்ச்சிப் படங்களை வெளியிடுவதுதான். திரிஷா கூட இப்படிச் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமியும் பூனம் பாஜ்வாவும் இந்த வழிமுறையைக் கையாண்டுள்ள னர். இருவரும் வெளியிட்ட கவர்ச்சிப் படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

லட்சுமிராய் இந்தியில் நடித்த 'ஜூலி 2' திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது. தமிழில் இவர் நடித்த 'சிண்ட்ரெல்லா' படமும் சொல்லிக் கொள்ளும்படியான வசூலைப் பெறவில்லை.

இந்நிலையில் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி வெளியிட்ட படம் பரவலாகப் பகிரப்படுகிறது.

இதேபோல் பூனம் பாஜ்வாவும் நீச்சல் உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இளம் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.