சமந்தா: என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது

சமந்தா: என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது

2 mins read
62f88eae-e218-45a7-bfb4-ac185e49d41b
-

"கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக நானும் மற்­ற­வர்­க­ளைப் போல் வாழ்க்­கை­யில் பல்­வேறு மோச­மான அனு­ப­வங்­க­ளைப் பெற்­றுள்­ளேன்," என்­கி­றார் சமந்தா.

இந்­தக் காலக்­கட்­டத்­தில் தமது உயி­ருக்கு அச்சுறுத்­தல் ஏற்­பட்­டது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

சமந்தா திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி 12 ஆண்டு­கள் கடந்­து­விட்­டன. இதை­ய­டுத்து தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் உருக்­க­மா­கப் பதி­விட்­டுள்­ளார்.

"இந்த 12 ஆண்டு கால நினை­வு­களும் 'லைட்ஸ்', 'கேமரா', 'ஆக்­‌ஷன்' என்று ஒப்­பற்ற தரு­ணங்­க­ளைச் சுற்றி உள்­ளன. இது ஆசீர்­வ­திக்­கப்­பட்ட பய­ணம்.

"உல­கின் சிறந்த, நேர்­மை­யான ரசி­கர்­களை பெற்­ற­தற்­காக நான் நன்­றி­யு­டன் இருப்­பேன்," என்று தெரி­வித்­துள்­ளார் சமந்தா.

மேலும் தமது விவா­க­ரத்து குறித்­தும் மறை­மு­க­மாக அவர் சில வரி­க­ளைப் பதிவு செய்­துள்­ளார். இதை­யடுத்து ஏரா­ள­மான ரசி­கர்­கள் அவ­ருக்கு ஆறு­தல் கூறும் வித­மாக இந்­தப் பதி­வுக்­குப் பின்­னூட்­ட­மிட்­டுள்­ள­னர்.

"கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக நானும் மற்­ற­வர்­க­ளைப்­போல் தோல்வி, இழப்பு, அவ­மா­னம், விவா­க­ரத்து ஆகி­ய­வற்றை எதிர்­கொண்­டுள்­ளேன். ஏன், மர­ணத்தை எதிர்­கொண்டு இருக்­கி­றேன். எனது உயி­ருக்­கும் அச்­சு­றுத்­தல் இருந்­தது.

"என்­னி­டம் இருந்த பணம் பறி­போ­னது. எனது குடும்­பம் சிதைந்து இருக்­கிறது, ஆனா­லும் ஒவ்­வொரு நாளும் பிரச்­சி­னை­களில் இருந்து மீண்­டெ­ழுந்து, வாழ்க்கை­யின் அடுத்த செங்­கலை எடுத்து வைத்தேன்.

"எது நடந்­தா­லும் சரி, உங்­கள் முன்­னால் இன்­னொரு செங்­கல் இருக்­கிறது. நீங்­கள் எழுந்து நடக்­கப் போகி­றீர்­களா அல்­லது விழுந்துகிடக்கப் போகி­றீர்­களா என்­ப­து­தான் உங்­கள் முன் இருக்­கும் கேள்வி," என்று தமது சமூக ஊட­கப் பதி­வில் சமந்தா மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் ஹாலி­வுட் நடி­கர் வில் ஸ்மித் எழு­தி­யுள்ள சுய­ச­ரி­தை­யில் இருந்து சில வாச­கங்­களை மேற்­கோள் காட்­டி­யுள்ள அவர், தமது திரைப்­ப­ய­ணம் நீடிக்­கும் என்று கூறி­யுள்­ளார்.

தற்­போது தெலுங்­கில் உரு­வாகி வரும் சாகுந்­த­லம், ஃபிலிப் ஜான் இயக்­கும் இந்­திப் படம் ஆகி­ய­வற்­றில் நடித்து வரு­கி­றார் சமந்தா.

தமி­ழில் அவர் நடித்­துள்ள 'காத்து வாக்­குல ரெண்டு' காதல் விரை­வில் திரை­காண உள்­ளது.

இவர் ஆற்­றிய சமூ­கப் பணி­க­ளைப் பாராட்­டும் வித­மாக தெலுங்­கானா அரசு சிறப்பு விருது அளித்து கௌர­வித்­துள்­ளது.

இது­போன்ற பாராட்­டு­களும் அங்கீ­கா­ர­மும் தொடர்ந்து இத்­த­கைய பணி­களில் ஈடு­ப­டு­வதற்­கான உத்­வே­கத்தை அளிப்­ப­தாக அவர் கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் 'சமந்­தா­வின் 12 ஆண்­டு­கள்' என்ற ஹேஷ்­டேக் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது.

இதற்­கா­க­வும் ரசி­கர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார் சமந்தா.