சுந்தர்.சி. இயக்கத்தில் ஜீவா, ஜெய் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார் தொலைக்காட்சிப் புகழ் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடிப்பது உற்சாகம் அளிக்கிறது. இது குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக உருவாகி றது. சுந்தர்.சி. இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியான அனு பவம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
கதைப்படி இரு நாயகர்களின் தங்கையாக நடிக்கிறாராம் டிடி. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, குஷ்பு இப்படத்தை தயாரிக்கிறார். அவரும் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்.

