திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
29089976-80cc-4310-ac75-a4a6fa619bc2
-
multi-img1 of 3

 கொரோனா நெருக்கடி காலத்தை மையப்படுத்தி இந்தியில் உருவாகும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் டாப்சி. அனுபவன் சின்ஹா தயாரிக்கும் இந்தப் படத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளனர்.

"இது பல கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி வகைப் படமாக உருவாகிறது. இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிடுகிறோம். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்த சில சோகச் சம்பவங்களைப் பதிவு செய்கிறோம்.

"கொரோனா விவகாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக இப்படத்தை உருவாக்குகிறோம்," என்கிறார் டாப்சி.

 கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள 'சாணிக் காகிதம்' படம் விரைவில் திரைகாண உள்ளது. அவர் கைவசம் வேறு தமிழ்ப் படங்கள் இல்லை.

தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதையடுத்து, தெலுங்கில் நானி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமான நிலையில், 'போலோ ஷங்கர்' படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார். இந்த மூன்று தெலுங்கு படங்களும் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

ஆனால் தமிழில் எந்தப் பட வாய்ப்பும் அமையாதது கீர்த்திக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல்.

 'மாநாடு வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் 'மன்மதலீலை'. எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகிகளாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

 தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'மாறன்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த தொகுப்பை நடிகர் சிம்பு வெளியிட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.