மே 26ஆம் தேதி வெளியீடு காணும் ‘கோப்ரா’

அஜித்­தின் 'வலிமை' படம் வெளி­யீடு காண்­ப­தற்­காக பல தமிழ்ப் படங்­கள் காத்­தி­ருந்­தன. 'வலிமை' படம் வெளி­யாகி வசூ­லைக் குவித்து வரும் நிலை­யில், இது­வரை காத்­தி­ருந்த படங்­க­ளின் வெளி­யீட்டுத் தேதி வரி­சை­யாக அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அந்த வகை­யில் அஜய் ஞான­முத்து இயக்­கத்­தில் விக்­ரம் நடித்­துள்ள 'கோப்ரா' படம் மே 26ஆம் தேதி வெளி­யாக உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"ரசி­கர்­கள் இன்­னும் மூன்று மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்," என்று இயக்­கு­நர் அஜய் ஞான­முத்து டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டுள்­ளார். வெளி­யீடு தாம­த­மா­னா­லும் இந்­தப் படம் விக்­ரம் ரசி­கர்­க­ளின் அனைத்­து­வி­த­மான எதிர்­பார்ப்­பு­களை­யும் நிறை­வேற்­றும் வகை­யில் இருக்­கும் என்று அவர் உறுதி அளித்­துள்­ளார்.

"இந்­தப் படத்­தில் விக்­ரம் ஏழு வெவ்­வேறு தோற்­றங்­களில் நடித்­துள்­ளார். இதற்­காக அவர் எதிர்­கொண்ட சவால்­களும் சிர­மங்­களும் என்னை வியக்க வைத்­த­ன. படத்தை திரை­யில் காணும் அனை­வ­ருமே விக்­ரம் நடிப்­புக்­கா­க­வும் அவ­ரது அர்ப்­ப­ணிப்­புக்­கா­க­வும் பாராட்­டு­வார்­கள்," என்­கி­றார் அஜய் ஞான­முத்து.

சிவ­கார்த்­தி­கே­யன் நடிக்­கும் 'டான்' திரைப்­ப­டம் வரும் 25ஆம் தேதி வெளி­யா­கிறது.

நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் 'யானை' திரைப்படத்தில் நடித்துள் ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இப்படம் மே 6ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்', ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' போன்ற பிரம்மாண்டப் படங்களும் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!