நடிகர் சூர்யா நடித்திருக்கும்
'எதற்கும் துணிந்தவன்' படம் முதல் 'புரட்சி நாயகன்' என்ற பட்டப்பெய
ருடன் திரைக்காண இருக்கிறார்.
சூர்யா நடித்திருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக 'எதற்கும் துணிந்தவன்' படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை முன்னோட்டக் காட்சி உருவாக்கிஉள்ளது.
வழக்கமாக இயக்குநர் பாண்டிராஜின்
படங்கள் அனைத்தும் குடும்ப உறவுகளுக்கு இடையேயான பாசப்போராட்டமாகவே இருக்கும்.
ஆனால், இந்தப் படத்தில் சண்டைக் காட்சி
களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், "சூர்யாவுக்கு 'புரட்சி நாயகன்' என்ற பட்டத்தை அளிக்கிறேன்.
எம்ஜிஆருக்கு பிறகு திரை
யிலும் நிஜ வாழ்விலும்
நடிகர் சூர்யா ஒரே மாதிரிதான் இருக்கிறார்.
"ஜெய்பீம்' போன்ற படத்தில் நடித்ததே துணிவு தான். மேலும், அம்பேத்கர், பெரியார் கருத்து
களைத் திரைப்படங்களில் அதிகம் காட்ட வேண்டும். சூர்யா ரசிகர்கள் அவரைப் பின்பற்ற வேண்டும்.
"கல்விக்கொடை, வள்ளல் தன்மை, எதையும் துணிச்சலாக சூர்யா பேசுவதை அவருடைய ரசிகர்கள் பின்பற்ற வேண்டும்.
"பெரியார் சீடன் என்பதால் என் மனதில் பட்டதை அப்படியே பேசுவேன். அதனால் எனக்கு படங்கள் கிடைக்கவில்லை, இருந்தாலும் பரவாயில்லை," என்று அவர் மேடையில் பேசினார்.
ரஜினிகாந்துக்கு 'சூப்பர் ஸ்டார்', கமல்ஹாசனுக்கு 'உலக நாயகன்', விஜய்க்கு 'தளபதி', அஜித்துக்கு 'தல' என்று நடிகர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சூர்யாவுக்கும் 'புரட்சி நாயகன்' என்ற பட்டம் வழங்கப்பட்டு இருப்பதை அவருடைய ரசிகர்கள் பெரிதும் வரவேற்றிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் 'புரட்சி நாயகன்' சூர்யா என பதிவு செய்யப்படும் என்றும் இனி அடுத்தடுத்து வரும் சூர்யாவின் படங்களிலும் 'புரட்சி நாயகன்' என்ற பட்டம் குறிப்பிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
'எற்கும் துணிந்தவன்' படத்திலிருந்து
டி.இமானின் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
படத்தில் வினய், சுப்பு பஞ்சு உள்பட ஒரு சில வில்லன்கள், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்பட ஒரு சில குணசித்திர கதாபாத்திரங்கள், சூரி, தேவதர்ஷினி, புகழ் ஆகிய நகைச்சுவை நடிகர்கள் என மொத்தத்தில் ஒரு வெற்றிப் படமாக 'எதற்கும் துணிந்தவன்' அமைந்து உள்ளது என்பது இந்த முன்னோட்டக் காட்சியில் இருந்து தெரிய வருகிறது.
மேலும் படத்தில் சூர்யாவின் அதிரடி சண்டைக் காட்சிகள், சூர்யா - பிரியங்கா மோகனின் காதல் காட்சிகள், சூரி-புகழ் நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் நிறைந்திருப்பது வரவேற்கும்படி இருக்கிறது.
பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெண்கள் என்றால் பலமானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது போன்ற அர்த்தமுள்ள வசனங்கள் இந்த படத்தின் கூடுதல் வெற்றிக்கு உகந்த காட்சிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 10ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் படங்கள் தொடர்ந்து 'ஓடிடி'யில் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'எதற்கும் துணிந்தவன்' படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி
வருகின்றன. அதுபற்றி அதிகாரபூர்வ செய்தி விரைவில் வெளிவரும் என்று அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

