'பொன்னியின் செல்வன்'

1 mins read

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தினை 'கான்' திரைப்பட விழாவில் திரையிட படக்குழு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குத் திரையிட்டால் உலக அளவில் படத்தினை விளம்பரம் செய்ததுபோல் இருக்கும் என்று எண்ணுகிறது படக்குழு. இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இந்தப் படத்தினை லைகா நிறுவனத்துடன் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.