'பீஸ்ட் ' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியின் காணொளி இணையத்தில் வெளியாகிறது. இதனால் அப்படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே 'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியே கசிந்ததால் விஜய் கடும் கோபத்தில் உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் அதேபோன்று காணொளிப்பதிவு வெளியானதை அடுத்து, படப்பிடிப்புக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
யார் இவ்வாறு அத்துமீறி செயல்பட்டனர் என்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் கூறியுள்ளார் விஜய்.
இதற்கிடையே 'பீஸ்ட்' படம் தொடர்பான புகைப்படங்கள், காணொளிப்பதிவுகளை சமூக ஊடகங்களில் யாரும் பகிர வேண்டாம் என்று அப்படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் படங்களைப் பகிர்வதை நிறுத்தி உள்ளனர்.

