'வல்லமை' படத்துக்காக அஜித் தன் உடல் எடையைக் குறைக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் துவங்குகிறது. ஆனால், அஜித் மே மாதம்தான் அதில் பங்கேற்க உள்ளார். அதுவரை அவர் இல்லாத பகுதிகளைப் படமாக்க உள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடையைக் குறைத்து, முறுக்கேறிய அஜித்தாக மாறிவிடுவாராம்.
இருசக்கர வாகனங்கள், கார்கள் ஓட்டுவதை நிறுத்திவிட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.
ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலின்போது, வாகனங்கள் ஓட்டுவது ரொம்பப் பிடிக்கும் என்று சொன்ன நீங்கள், திடீரென அதை நிறுத்தியது ஏன்? என்று ரசிகர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில ளித்த யாஷிகா, "நீங்கள் எல்லோ ரும் சொல்வது போல், என் நெருங்கிய தோழியைக் கொன்று விட்டேன். அதுதான் காரணம். இதுவும் நன்மைக்கே," என்றார்.
மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் லட்சுமி. தமது அண்மைய புகைப்படங்களை ஆல்பமாகத் தொகுத்து, முன்பு தன்னுடன் இணைந்து நடித்த கதாநாயகர்கள், பழைய தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறார். பிரபுதேவாவுடன் அவர் நடித்து முடித்திருக்கும் 'யங்மங்சங்' பட வெளியீட்டுக்கா கக் காத்திருக்கிறார்.
விரைவில் ஐஸ்வர்யா ரஜினி திரைப்படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்றும் அந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் உடனான திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா மீண்டும் படம் இயக்குவதில் தன் கவனத்தைக் குவித்துள்ளாராம். தற்போது முசாபிர் என்ற இசைத்தொகுப்பை இயக்கி வருபவர், அடுத்து ஒரு திரைப் படத்தை இயக்குவது என முடிவு செய்துள்ளார். அதில் சிம்பு நாயகனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நாயகி யார் என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல்.
விஷாலுக்கு நடப்பாண்டில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதில் அவரது குடும்பத்தார் உறுதியாக உள்ளனராம்.
அண்ணனுக்காக பெண் தேடிக்கொண்டிருக்கிறார் விஷாலின் தங்கை.

