பாதையை மாற்றும் தமிழ் கதாநாயகர்கள்

பாதையை மாற்றும் தமிழ் கதாநாயகர்கள்

2 mins read
5ef24fb2-73a6-4a0a-aaef-47c77535391a
-

அண்­மைக் கால­மாக தென்­னிந்­தி­யத் திரை­யு­ல­கில் தயா­ரிக்­கப்­படும் புதுப்­படங்­களை விளம்­ப­ரப்­ப­டுத்­தும்­போது, 'இது அகில இந்­தியப் படம்', 'அகில இந்­திய வெளி­யீடு' என்று குறிப்­பி­டு­கின்­ற­னர்.

அதா­வது, ஒரு மொழி­யில் மட்­டும் படம் எடுக்­கா­மல், குறைந்த பட்­சம் இரண்டு மொழி­களில் நேர­டி­யாக ஒரு படத்தை உரு­வாக்கி, அதை நாடு முழு­வ­தும் வெளி­யி­டும் புது பழக்­கம் தென்­னிந்­தி­யா­வில் ஏற்­பட்­டுள்­ளது.

நூறு கோடி ரூபாய் செல­வில் தயா­ரிக்­கப்­படும் ஒரு தமிழ் அல்­லது தெலுங்­குப் படத்­தின் குறைந்­த­பட்ச வசூல் நூறு கோடி­யைக் கடந்­து­விட்­டால் அது வெற்­றிப்­படம் எனக் கரு­தப்படுகிறது. ஆனால், ஓர­ள­வுக்கு மேல் இந்த வசூல் கூடு­வ­தில்லை.

இந்­நி­லை­யில், அதி­கம் லாபம் ஈட்­டு­வ­தற்­கான வழி­யைக் கோடம்­பாக்­கத்து நாய­கர்­க­ளுக்­கும் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் காட்­டி­யுள்­ளது தெலுங்குத் திரை­யு­ல­கம். அங்கு அண்­மைக்­கா­ல­மாக தயா­ரிக்­கப்­படும் பெரிய நடி­கர்­க­ளின் படங்­கள் தெலுங்கு, இந்தி என இரு மொழி­களில் தயா­ரா­கின்றன.

இத­னால் இந்தி திரைப்­படச் சந்­தை­யி­லும் இந்­தப் படங்­கள் நல்ல விலைக்கு வாங்­கப்­ப­டு­கின்­றன என்­கி­றார்­கள் விவ­ர­ம­றிந்­தவர்கள்.

"ஆனால், ஒரு தெலுங்குப் படத்­தில் ஒரு வட இந்­திய நாய­கி­யை­யும் இந்தி வில்­ல­னை­யும் கள­மி­றக்­கும்­போது இயல்­பா­கவே அந்­தப் படத்­துக்கு பாலி­வுட் சந்­தை­யி­லும் இடம் கிடைக்­கும்.

"மேலும், மொழி­மாற்­றம் செய்­யப்­பட்ட படம் அல்ல என்­ப­தை­யும் விளம்­ப­ரம் மூலம் ரசி­கர்­க­ளுக்கு உணர்த்­து­கி­றார்­கள். தவிர, 200 கோடி ரூபாய் போல் செல­விட்டு, பிரம்­மாண்ட படைப்­பாக மாற்­று­கி­றார்­கள்.

"ஒரே சம­யத்­தில் பல மொழி­களில் வெளி­யி­டு­வ­தன் மூலம் பெரும் லாபம் கிடைக்­கிறது. இது­தான் தெலுங்குப் படங்­க­ளின் வசூல் சாத­னைக்கு கார­ணம். தமிழ்த் திரை­யு­ல­மும் இதைப் பின்­பற்ற வேண்­டும்," என்­கி­றார் தயா­ரிப்­பா­ளர் தனஞ்­செ­யன்.

இவர் குறிப்­பி­டும் வழி­மு­றை­யைப் பின்­பற்­றித்­தான் தற்­போது தனுஷ், சிவ­கார்த்­தி­கே­யன் உள்­ளிட்­டோர் அகில இந்­தியப் படங்­களில் நடிக்க முன்­னு­ரிமை அளிக்­கின்­ற­னர்.

தமி­ழில் முதன்மை நாய­க­னாக நடிக்­கும் தனுஷ், இந்தி­யில் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க ஒப்­புக்­கொள்­கி­றார். சிவ­கார்த்­தி­கே­யன் நேரடி தெலுங்குப் படத்­தில் நடிக்­கி­றார். விஜய்­யும் இந்­தப் பட்­டி­ய­லில் தற்­போது இணை­கி­றார். விஜய் சேது­பதி ஏற்­கெ­னவே பல மொழிப் படங்­களில் நடித்து வரு­கி­றார்.

"விஜய், அஜித் போன்­ற­வர்­க­ளின் படங்­கள் இந்­தியா முழு­வ­தும் வெளி­யி­டு­வ­தற்கு ஏற்­ற­வை­தான். எனி­னும், அவற்றை உரு­வாக்­கும் விதம் மாற வேண்­டும். பிற­மொழி நடி­கர்­கள், படத்­தின் பட்­ஜெட், கதை அமைப்பு ஆகி­ய­வற்­றில் மாற்­றங்களைச் செய்­யும்­போது அனைத்து மொழி ரசி­கர்­க­ளை­யும் கவர முடி­யும். மேலும் விளம்­ப­ர­மும் முக்­கி­யம்," என்­கி­றார் தனஞ்­செ­யன்.