விஜய்க்கு நாயகி இல்லை

விஜய்க்கு நாயகி இல்லை

1 mins read
1c500fbc-8565-4202-8827-cb2127d04c48
விஜய் -

'பீஸ்ட்' படத்­தில் நடித்து முடித்­துள்ள நிலை­யில், தனது அடுத்த இரு படங்­களில் கவ­னம் செலுத்­தத் தொடங்கி உள்­ளார் விஜய்.

விஜய்­யின் 'தள­பதி 66' படத்தை தெலுங்கு இயக்­கு­நர் வம்சி இயக்­கு­வது தெரிந்த தக­வல்­தான்.

நேர­டித் தெலுங்­குப் பட­மாகத் தயா­ரா­கிறது. இப்­படத்தை இந்தி, கன்­னட மொழி­க­ளி­லும் வெளி­யிட உள்­ள­னர்.

இதில் விஜய்­யு­டன் மோதும் வில்­லன் கதா­பாத்­தி­ரத்­துக்­காக இந்தி நடி­கர் விவேக் ஓப­ராய் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தக வல். ஏற்­கெ­னவே அஜித்­தின் 'விவேகம்' படத்­தில் வில்­ல­னாக நடித்­துள்­ளார் விவேக் ஓப­ராய்.

இதை­ய­டுத்து, விஜய்­யின் 67ஆவது படத்தை லோகேஷ் கன­க­ராஜ்­தான் இயக்க உள்­ளா­ராம். அவ­ரது இயக்­கத்­தில் உரு­வான 'கைதி' படத்­தைப் போல் தனது பட­மும் விறு­வி­றுப்­பாக இருக்க வேண்­டும் என விஜய் கூறி­யுள்­ள­தா­கத் தக­வல்.

அண்­மை­யில் விஜய்யை நேரில் சந்­தித்து லோகேஷ் சொன்ன கதை­யில் கதா­நா­ய­கியே கிடை­யாது என்­றும் பாடல்­கள் இல்­லாத முழு­நீள அதி­ரடி, அடிதடிப் பட­மாக அந்­தக் கதையை திரை­யில் விவ­ரிக்­கப் போவ­தா­க­வும் லோகேஷ் தரப்­புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.