ஒன்றாக வாழ்வது ஒரு கலை என்று இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
தனது குடும்பத்தாரின் புகைப்படங்களை ரகுமான் அதிகம் வெளியிட்டதில்லை. தன் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டும் சில முறை வெளியிட்டுள்ளார்.
மனைவியுடனும் மகளுடனும் இருக்கும் படங்களை அவர் எப்போதாவது ஒருமுறைதான் வெளியிடுவார்.
இந்நிலையில், நேற்று தமது 27ஆவது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார் ரகுமான். இதையடுத்து, தன் மனைவி சாய்ரா பானுவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அவர், "ஒன்றாக இருப்பது ஒரு கலை. எல்லா புகழும் இறைவனுக்கே," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஏராளமான ரசிகர்களும் திரையுலகத்தினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழில் 'பொன்னியின் செல்வன்', 'இரவின் நிழல்', 'வெந்து தணிந்தது காடு', 'மாமன்னன்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ரகுமான்.

