ஏலத்துக்கு வரும் வீடு: நடிகர் ராஜசேகர் மனைவி கண்ணீர்

ஏலத்துக்கு வரும் வீடு: நடிகர் ராஜசேகர் மனைவி கண்ணீர்

2 mins read
ff4fb421-14fa-4649-a9b8-9123f7676953
நடிகர் ராஜசேகர், அவரது மனைவி தாரா. -

காலஞ்­சென்ற இயக்­கு­ந­ரும் நடி­கரு­மான ராஜ­சே­க­ரின் வீடு ஏலத்­துக்கு வந்­துள்­ளது. வங்­கிக் கடனை திருப்­பிச் செலுத்த முடி­யாத நிலை­யில் இருப்­ப­தால், தமக்கு திரை­உல­கத்­தி­னர் உதவ வேண்­டும் என ராஜ­சே­க­ரின் மனைவி தாரா வேண்டு­கோள் விடுத்­துள்­ளார்.

கடந்த 1980களில் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­வர் ராஜ­சேகர். 'நிழல்­கள்' திரைப்­ப­டத்­தில் இளை­ய­ரா­ஜா­வின் இசை­யில் ஒலித்த 'இது ஒரு பொன்­மாலை பொழுது' பாடலுக்கு திரை­யில் தோன்­றிய நடி­கர் இவர்­தான்.

இவ­ரும் ராபர்ட் என்­ப­வ­ரும் இணைந்து படங்­கள் இயக்கி உள்­ள­னர். பின்­னர் ராஜ­சே­கர் மட்­டும் நடிப்­பில் கவ­னம் செலுத்­தி­னார்.

அதன் பிறகு ஏரா­ள­மான படங்­களில் வில்­லன், குணச்­சித்­திர வேடங்­களில் நடித்­துள்­ளார். மேலும் தொலைக்­காட்­சித் தொடர்­க­ளி­லும் நடித்­தார். எனி­னும் இத்­த­கைய வாய்ப்­பு­கள் மூலம் அவர் அதி­கம் சம்­பா­திக்­க­வில்லை எனக் கூறப்­படு­கிறது.

ராஜ­சே­கர், தாரா தம்­ப­தி­யர்க்கு குழந்­தை­கள் இல்லை. இந்­நி­லை­யில், நடிப்­பில் இருந்து ஓய்வு பெறு­வதற்கு முன்­னர் சென்­னை­யில் எப்­ப­டி­யா­வது சொந்த வீடு வாங்க வேண்­டும் என விரும்­பி­யுள்­ளார் ராஜ­சே­கர்.

"எப்­ப­டியோ போராடி வட­ப­ழனி பகு­தி­யில் ஒரு வீடு வாங்­கி­னோம். அதற்­காக வங்­கி­யில் கடன் பெற்­றார். ஆனால் 2019ஆம் ஆண்டு அவர் கால­மா­ன­தும் வங்­கிக் கடனுக்­கான தவ­ணை­யைச் செலுத்த முடி­ய­வில்லை.

"யாரு­டைய துணை­யும் இன்றி தனி­யாக வசித்­துவரும் நிலை­யில், சொந்த வீடு மூலம் கிடைக்­கும் வாட­கைப் பணத்­தில்­தான் நான் ஒரு­வேளை சாப்­பிட்­டுக்கொண்­டி­ருக்­கி­றேன்.

"கடன் தவ­ணை­க­ளைச் செலுத்­தா­த­தால் அந்த வீடும் இப்­போது ஏலத்­துக்கு வர உள்­ளது. வீடு கைவிட்­டுப் போனால் அடுத்த மாதத்­தில் இருந்து சாப்­பி­டக்­கூட வழி­யின்­றிப் போகும்," என்­கி­றார் தாரா.