அட்லீ: நீங்களும் இப்படி வருத்தப்படும் காலம் வரும்

அட்லீ: நீங்களும் இப்படி வருத்தப்படும் காலம் வரும்

1 mins read
4f8f616f-ffbd-4ded-a35e-e4c433af7e68
நடிகர் ஷாருக்கானுடன் அட்லீ தம்பதியர். -

சிலர் தம்மைத் தவ­றாக வழிநடத்­தி­ய­தாக இயக்­கு­நர் அட்லீ சாடியுள்­ளார். இவர் ஷாருக்­கானை வைத்து இந்­தி­யில் இயக்கி வந்த படம் திடீ­ரென கைவி­டப்­பட்­ட­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது. அதில் நயன்­தாரா நாய­கி­யாக நடிக்­கி­றார்.

இந்­நி­லை­யில், இந்­தப் படத்­தின் கதை தொடர்­பாக பல்­வேறு தக­வல்­கள் வெளி­யா­கின.

வேறொரு படத்­தின் கதை­யைத் தழுவி அட்லீ தன் படத்­துக்­கான கதையை தயார் செய்­தி­ருப்­ப­தா­க­வும் பல காட்­சி­கள் வேறு படங்­களில் இடம்­பெற்­றவை என்­றும் சமூக ஊட­கங்­களில் பலர் பதி­விட்­ட­னர். இது ஷாருக்­கா­னின் கவ­னத்­துக்­குச் செல்ல, அவர் மிகுந்த வருத்­தத்­தில் மூழ்கி உள்­ள­தா­கத் தக­வ­ல். இதை­ய­டுத்தே, பட வேலை­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்கு­மாறு அவர் கூறி­ய­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், "சிலர் உங்­களை ஏன் தவ­றாக நடத்­தி­னார்­கள் என்று வருத்­தப்­படும் காலம் உங்­க­ளது வாழ்­வில் வரும். என்னை நம்­புங்­கள்," என்று பதி­விட்­டுள்­ளார் அட்லீ. அவர் யாரைப்பற்றி இவ்வாறு குறிப் பிட்டுள்ளார் எனத் தெரியவில்லை.