கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதல் வயப்பட்டுள்ளதாக பலமுறை செய்தி வெளியாகிவிட்டது. எனினும் இருவரும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை.
இந்நிலையில், மஞ்சிமாவின் பிறந்தநாளையொட்டி கௌதம் கார்த்திக்கும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதன் மூலம் அவர்க ளுடைய காதல் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தமது பதிவில் மஞ்சிமாவை 'மோமோ' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த வாழ்வில் இதுநாள் வரை நான் பெற்ற, அதிலும் பெருமைப்படக்கூடிய விஷயமாக ஒன்று இருந்தது என்றால் என்னுடைய வாழ்க்கையில் உன்னைப் போன்ற ஒருவர் இருப்பதுதான்," என்று குறிப்பிட்டு மஞ்சிமாவை வாழ்த்தி உள்ளார் கௌதம்.
முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் கௌதமும் மஞ்சிமாவும் இணைந்து நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

