திரைத் துளிகள்

 நயன்தாரா தன் நெற்றியில் குங்குமத்துடன் காட்சியளிக்கும் புகைப்படத்தால் அவருக்குத் திருமணமாகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றிருந்தார் நயன்தாரா. அங்கு எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களில் அவர் நெற்றியில் குங்குமத்துடன் இருப்பது தெரிகிறது. இதை வைத்து அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி விட்டதாக சமூக ஊடங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். ஆனால் நயன்தாரா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

 சில அம்சங்களின் அடிப்படை யில் பெண்களை மதிப்பீடு செய் வதை அனைவரும் நிறுத்த வேண் டும் என்கிறார் சமந்தா. அண்மைய சமூக ஊடகப் பதிவு ஒன்றில், அனைவரும் உருப்படியாகச் செய்வ தற்கு வேறு பல வேலைகள் காத்தி ருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு சிலர் பெண்களை அவர்கள் அணிந்திருக்கும் ஆடை, அணி கலன்களை வைத்து மதிப்பீடு செய்கிறார்கள். இது தேவையற்றது. இவ்வாறு மதிப்பீடு செய்வதை தவிர்த்துவிட்டு, நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த லாம்?" என்று தமது பதிவில் சமந்தா தெரிவித்துள்ளார்.

 "கோடை வெயிலுக்கு இதமளிக்கும் இயற்கை வளங்கள்தான் காடுகள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்குமான ஒரு கனவு பிரதேசம்தான் காட்டுப் பகுதி. பறவைகள் தாவரங்கள் ஆகியவை வாழும் அந்தப் பகுதியைக் காப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். எளிதாக தீப்பற்றிக் கொள்ளும் பொருள்களை எடுத்துச் செல்லும்போது ஒரு சின்ன தீப்பொறி பட்டால்கூட காடுகளுடன் சேர்ந்து மரங்கள் பறவைகளும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். காட்டுத்தீக்கு எதிரான இந்தப் போரில் வனத்துறையுடன் இணைந்து நாமும் காடுகளைக் காப்போம்," என்று கூறியுள்ளார் கார்த்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!