'வெகு நேரம் யோசிப்பேன்'

'வெகு நேரம் யோசிப்பேன்'

2 mins read
f4ba9183-3fab-4c6b-9253-7ce97dc698a9
விஜய் சேதுபதி -

"என் மனைவி என் மீது காட்­டும் அன்­பிற்கு முன்­னால் நான் செய்­யும் அனைத்­தும் தூசி­யா­கி­வி­டு­கிறது," என்­கி­றார் விஜய் சேது­பதி.

'நான் உன்னை நேசிக்­கி­றேன்' என்ற மூன்று வார்த்­தை­கள் அந்த அன்பை எவ்­வாறு அடக்க முடி­யும் என கேள்வி­யும் எழுப்­பு­கி­றார்.

"என் மனைவி, குழந்­தை­க­ளி­டம் நான் சொல்­லும் 'ஐ லவ் யூ' என்ற சொற்க ளுக்குப் பின்னால் ஐம்­பது அறு­பது பக்க உணர்­வு­கள் இருக்­கின்­றன.

"அப்­ப­டித்­தான் ரசி­கர்­கள் என் மீது காட்­டும் அன்­பை­யும் அதற்கு ஈடா­கக் கரு­து­கி­றேன்.

"நான் அதி­கம் வாசித்­த­தில்லை. ஒரு விஷ­யத்­தைப் பற்றி ஒரு­வர் பேசி­னால் அத­னுள் என்­ன­வெல்­லாம் இருக்­கிறது என்று அதைப் பற்றி நான் வெகு நேரம் யோசிப்­ப­துண்டு. நான் மனி­தர்­களை மலை­கள் போல பார்க்­கி­றேன்.

"இயற்கை படைத்த மலை­க­ளி­டம் நீங்­கள் பேசும்­போது உங்­க­ளி­டம் அது மீண்­டும் எதி­ரொ­லிக்­கிறது அல்­லவா. அதைப்­போ­லத்­தான் இரு நபர்­கள் பேசிக்­கொள்­ளும்­போது தங்­க­ளின் கருத்­து­களை ஒவ்­வொ­ரு­வ­ரும் எதி­ரொ­லித்­துக்கொள்­கி­றார்­கள்.

"ஒரு சிலையை வடித்­து­விட்டு அதை நாம் அழகு என்­கி­றோம். இயற்கை­யான மலையை உரு­வ­மற்­றது என்­கி­றோம். நம்­மால் அந்த உரு­வத்தை வடிக்க இய­லுமா?

"நாம் விவ­சா­யம் செய்­வ­தால் இயற்கை­யான காடு­களை ஒழுங்­கற்­றது என்­கி­றோம். ஆனால் அவை ஒழுங்­கு­டன்­தான் இருக்­கின்­றன. அதை யாரும் கவ­னிப்­ப­தில்லை. அப்­படிச் சொல்­வ­தற்கு நாம் யார். வேற்று மொழி­யில் பேசு­வ­தைப் புரிந்­து­கொள்ள முடி­யா­மல் அதை தவறு என்று சொல்­வது போன்­றது இது," என்­கி­றார் விஜய் சேது­பதி.

"சும்மா இருந்­தால் போர் அடிக்­கிறது என்­கி­றார்­கள். ஒரு மரத்தை வெறு­மனே வேடிக்கை பாருங்­க­ளேன். அப்­ப­டிச் செய்­தால் நம்மை வெட்­டிப் பயல் என்­பார்­கள். ஆனால் அது வெட்டிச் செயல் அல்ல. 'கடைசி விவ­சாயி' திரைப்­ப­ட­மும் அப்படிப்பட்ட கதைதான். ஒவ்­வொன்­றை­யும் பார்க்க பார்க்க அவ்­வ­ளவு சந்­தோ­ச­மாக இருக்­கும்," என்கிறார் விஜய் சேதுபதி.