பீதி கிளப்பிய உக்ரேன் பயணம்

பீதி கிளப்பிய உக்ரேன் பயணம்

2 mins read
0d732d0b-b7b0-4312-8b3a-6766b25ca214
-

சர­வணா ஸ்டோர்ஸ் உரி­மை­யா­ளர் சர­வ­ணன் அருள் நாய­க­னாக நடிக்­கும் 'தி லெஜண்ட்' படத்­தின் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­ப­தற்­காக அண்­மை­யில் உக்­ரேன் சென்ற படக்­கு­ழு­வி­னர் அடித்துப் பிடித்­துக்கொண்டு ஊர் திரும்­பி­யுள்­ளனர்.

உக்­ரே­னில் நில­விய போர்ப்­ப­தற்­றம் கார­ண­மாக ஊர் திரும்­பி­ய­தா­க­வும் உக்­ரே­னில் இருந்த ஒவ்­வொரு நிமி­ட­மும் பீதியை உணர்ந்­த­தா­க­வும் சொல்­கி­றார் அந்­தப் படத்­தின் கதா­நா­யகி ஊர்­வசி ரௌடேலா.

கடந்த பிப்­ர­வரி 19ஆம் தேதி வரை உக்­ரே­னில்­தான் இருந்­தா­ராம். அந்­நாட்­டின் மீது தாக்­கு­தல் நடத்த இருப்­ப­தாக ரஷ்யா அறி­விப்பு வெளி­யி­டு­வ­தற்கு முந்­தைய நாளே நாடு திரும்­பி­விட்­டார்.

"நாங்­கள் படப்­பி­டிப்­பில் இருக்­கும்போது இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பதற்றம் அதி­க­ரித்து வந்­தது.

"ஆனால், நாங்­கள் இன்று என்ன நடக்­கிறது என்­பதை மட்­டுமே கருத்­தில்­கொண்டு திட்­ட­மிட்­டோம்.

"உக்­ரே­னில் நான் தரை­யி­றங்­கிய நிமி­டத்­தில் இருந்தே எனது சகோ­த­ரர் பயப்­ப­டத் தொடங்­கி­விட்­டார். என் அப்­பா­வும் வேறு வேலை­யாக அங்கு வந்­தி­ருந்­தார்.

"பயத்­தை­யும் மீறி என் அப்பா அங்­கி­ருந்­த­தால் பாது­காப்­பு­டன் இருப்­ப­தாக உணர்ந்­தேன்.

"படப்­பி­டிப்­புக்கு மத்தியில் உக்­ரேன் பிர­த­மரைச் சந்திப்­ப­தாக இருந்­தது. ஆனால் போர்ப்பதற்­றம் அதி­க­ரித்­த­தால் அவ­ரைச் சந்­திக்­க­வில்லை.

"உக்ரேனிய இசைக்­கலைஞர் மோனடிக்குடன் இணைந்து சில பணி­க­ளைச் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்­தோம். அது­வும் நடக்­க­வில்லை," என்­கி­றார் ஊர்­வசி.

உக்­ரே­னில் நிலைமை சீர­டைய வேண்­டும் என தாம் மன­தா­ரப் பிரார்த்­திப்­ப­தா­கக் குறிப்­பி­டு­பவர், தாம் இன்­னும் அச்­சத்­தில் இருந்து மீள­வில்லை என்­கி­றார்.

உக்­ரே­னில் ஊர்­வ­சிக்கு நிறைய நண்­பர்­களும் உற­வி­னர்­களும் உள்ள­ன­ராம். அவர்­க­ளு­டைய பாது­காப்பை நினைத்து கவ­லைப்­ப­டு­கி­றார்.

"அங்கு நிலைமை எப்­படி உள்­ளது எனத் தொடர்ந்து விசா­ரித்து வரு­கி­றேன். வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் அவர்­களு­டன் கைபேசி மூலம் பேசு­கி­றேன்.

"என் மன­தில் உள்ள பய­மும் பதற்ற உணர்­வும் மறைய நீண்ட கால­மா­கும்.

"எந்­தத் தாயும் போரில் இழப்­ப­தற்­கா­காகப் பிள்­ளை­க­ளைப் பெற்­றெ­டுப்­ப­தில்லை. போர் எதற்­கும் விடை­யா­காது. பாதிக்­கப்­படு­கிற குடும்­பங்­க­ளைப் பற்றி யோசிக்­கும்­போது இந்­தப் போரி­னால் எந்­தப் பய­னும் இல்லை," என்­கி­றார் ஊர்­வசி.

27 வய­தா­கும் இவர், தமிழ்ப் படத்­தில் நடிப்­பது தமக்கு மிகுந்த உற்­சா­கம் அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார். இதற்­காக தமி­ழில் பேச கற்­றுக்கொண்­டா­ராம்.

"இப்­போது பிறர் தமி­ழில் பேசு­வதை ஓர­ளவு புரிந்­து­கொள்ள முடி­கிறது. பதி­லுக்கு எனக்­குத் தெரிந்த தமிழை வைத்து அவர்­க­ளுக்­குப் பதில் அளிக்­கி­றேன்.

"தொடர்ந்து தமிழில் பேசினால் அது என் வசப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

"நான் நடிக்­கும் முதல் தமிழ்ப் படம் இந்தி, தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம் என ஐந்து மொழி­களில் வெளி­யீடு காண்­பதை பெரிய விஷ­ய­மா­கக் கரு­து­கி­றேன்.

"இதில் உயிரி தொழில்­நுட்ப ஆய்­வா­ள­ராக நடிப்­பது புது அனு­ப­வ­மாக உள்­ளது. மிக விரை­வில் சென்­னை­யில் அடுத்­த­கட்ட படப்­பிடிப்பு நடை­பெற உள்­ளது. படத்­தின் வெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் ஊர்வசி.

சென்­னை­யில் படப்­பிடிப்பு என்­ற­தும் அங்கு எந்­தெந்த இடங்­க­ளுக்­குச் செல்லவேண்­டும் என்­பது குறித்து தன் தோழி­க­ளி­டம் விவ­ரங்­களைக் கேட்­ட­றிந்­தா­ராம்.

சென்­னை­வா­சி­க­ளி­டம் நாம் நட்­பா­கப் பேசி­னால், உடனே நம் நட்பு வட்­டத்­தில் சேர்ந்­து­விடுவார்­கள் என்­கி­றார் ஊர்­வசி.