ஐஸ்வர்யாவுடன் இணையும் பாலாஜி

1 mins read
1ba4d848-986e-4c89-9bcf-c0c39086e05c
ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.ஜே.பாலாஜி. -

ஆர்.ஜே.பாலாஜி மீண்­டும் கதா­நா­ய­க­னாக நடிக்­கும் படத்­தில் ஐஸ்­வர்யா ராஜேஷ் நாய­கி­யாக ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

மலை­யா­ளத்­தில் பிருத்­வி­ராஜ், இந்­தி­ர­ஜித் சுகு­மார் ஆகிய இரு­வ­ரும் இணைந்து நடித்த 'தியான்' படத்தை இயக்­கிய ஜியன் கிருஷ்­ண­கு­மார், இந்­தப் படத்­தின் மூலம் தமி­ழில் இயக்கு­ந­ராக அறி­மு­க­மா­கி­றார்.

'மூக்­குத்தி அம்­மன்' படத்­தின் வெற்­றியை அடுத்து, ஆர்.ஜே.பாலா­ஜியை நாய­க­னாக ஒப்­பந்­தம் செய்ய சில இயக்­கு­நர்­கள் முயற்சி செய்­கின்­ற­னர். ஆனால், தனக்­கேற்ற கதையைத் தேர்வு செய்­வ­தில் அவர் கவ­ன­மாக உள்­ளார்.

இந்­நி­லை­யில், 'படாய் ஹோ' படத்­தின் தமிழ் மறு­ப­திப்­பான 'வீட்­டுல விசே­ஷங்க' படத்தில் நடித்து முடித்­துள்­ளார். இதில் அவ­ரு­டன் ஜோடி சேர்ந்­தி­ருப்­ப­வர் அபர்ணா பால­மு­ரளி. போனி கபூர் தயா­ரித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, நடி­கர் கார்த்­தி­யின் நண்­ப­ரான லக்­‌ஷ்­மன் குமார் தயா­ரிக்­கும் படத்­தி­லும் நாய­க­னாக ஒப்­பந்­த­மாகி உள்­ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதில்­தான் ஐஸ்­வர்யா ராஜேஷை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

படத்­தில் இன்­னொரு நாய­கி­யும் உள்­ளா­ராம். அது யார் என்­பது இன்­னும் முடி­வா­க­வில்லை. வரும் 23ஆம் தேதி படப்­பி­டிப்பு தொடங்க உள்ள நிலை­யில், தலைப்­பும் இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை.

அடுத்­த­டுத்து வெற்­றிப்­ப­டங்­களை அளித்து வரு­வ­தால் ஆர்.ஜே.பாலா­ஜிக்கு கோடம்­பாக்கத்தில் மவுசு அதி­க­ரித்­துள்­ளது. நாயக னாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று தாம் முடிவு செய்யவில்லை என்றும் கதைக்கேற்ற நாயகனாக இருக்க மட்டுமே முயற்சிப்பேன் என்றும் கூறுகிறார் பாலாஜி.

, :

  