நடிகர் கவுதம் கார்த்திக்கை தாம் காதலிப்பதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.
இது தொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதுவரை தமது வாழ்க்கையில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளை வெளிப்படையாகக் கூறி வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் மூன்று வயதில் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியதாகவும் திருமணம் போன்ற முக்கிய விஷயங்களை யாரிடமும் மறைக்கவேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதை விரும்புபவள் நான். அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் என் வாழ்க்கையில் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
"இந்தச் செய்தியை வெளியிட்டவர் என்னிடம் அதைக் கேட்டபோது நான் மறுக்கவே செய்தேன். ஆனால், அவர் என் வார்த்தைகளை மதிக்காமல் இவ்வாறு செய்தியை வெளியிட்டுள்ளார். அது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. நான் அந்த வதந்தியைக் கண்டுகொள்ளவில்லை," என்று மஞ்சிமா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
, :
மஞ்சிமா
மோகன்

