திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
0bd83044-bc76-4158-bdbc-015442085970
-
multi-img1 of 3

 தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஷ்ருதிஹாசன்.

தற்போது நடித்து வரும் 'சலார்' தெலுங்குப் படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. உண்மையில், ஆண்களைவிட பெண்கள்தான் சண்டை போடுவதில் கெட்டிக்காரர்கள் என்கிறார்.

"திரைப்படங்களில் பெண்களுக்கு சண்டைக்காட்சிகள் குறைவாகவே இருக்கும். இதற்காக இயக்குநர்களைக் குறைகூறி பலனில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை உதைப்பதிலும் குத்துவதிலும் பெண்கள்தான் கச்சிதமாகச் செயல்படுவார்கள்.

"பெண்கள் எட்டி உதைத்து சண்டையிடுவதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். புதுப்படத்தில் பிரபாசுடன் இணைந்து சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன்," என்கிறார் ஷ்ருதிஹாசன்.

 பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படம் முதல் நாளன்றே சுமார் 80 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. எனவே, ஒரு வாரத்துக்குள் 300 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்கிறார்கள் விவரமறிந்த வர்கள். எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்றாலும் தயாரிப்புத் தரப்புக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என்ற வகையில், பிரபாஸ் உற்சாகம் அடைந்துள்ளாராம்.

இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் தமது திருமணம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

"நிச்சயம் காதல் திருமணம்தான் செய்வேன். அதில் மாற்றம் இருக்காது. ஆனால், எப்போது திருமணம் நடக்கும் என்பது என் கையில் இல்லை. நடக்கும்போது சொல்கிறேன்," என்றார் பிரபாஸ்.

இவரையும் அனுஷ்காவையும் இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. எனினும், இருவருமே இது குறித்து மௌனம் காத்துவிட்டனர்.

 பாலா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நாயகனாக நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நாயகியாக தெலுங்கில் நடித்து வரும் கிருத்தியை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், கீர்த்தி ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்குத்தான் முக்கியம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். அதை உறுதி செய்துகொண்ட பிறகே கால்ஷீட் ஒதுக்கினாராம் கீர்த்தி.

 நடிகர் லாரன்சை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. இதையடுத்து, லாரன்ஸ் நடிக்கும் படத்தை இவர் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்னர், 'முஸாஃபிர்' என்ற இசைத்தொகுப்பை இயக்கி உள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு முன்னதாக '3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை அவர் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், அவரும் லாரன்சும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, "அண்ணனைச் சந்தித்த பிறகு எனது மூளை இன்னும் வேகமாகச் செயல்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் இருவரும் அண்ணன், தங்கை பாச உணர்வில் சந்தித்தோம். தொழில் ரீதியிலான சந்திப்பாகவும் இது அமைந்தது. இந்தச் சந்திப்பில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அதை ஐஸ்வர்யா ஒரு வாரத்தில் அறிவிப்பார்," என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.