'படப்பிடிப்பின்போதே சிரித்துவிட்டோம்'

'படப்பிடிப்பின்போதே சிரித்துவிட்டோம்'

1 mins read
9d5360fd-d828-4b28-95fe-c2b14154d629
லண்டனில் இயக்குநர் சுராஜ் (இடது ஓரம்), வடிவேலு. -

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு வடி­வேலு நாய­க­னாக நடிக்­கும் 'நாய்­சே­கர் ரிட்­டர்ன்ஸ்' படத்தின் இரண்­டாம் கட்­டப் படப்­பி­டிப்பை வெற்­றி­க­ர­மாக முடித்­துள்­ள­னர்.

வடிவே­லுவுக்கே உரிய பல்­வேறு நகைச்­சுவை அம்­சங்­களை இந்­தப் படத்­தில் எதிர்­பார்க்­க­லாம் என்­கிறார் இயக்­கு­நர் சுராஜ்.

மைசூர் அரண்­ம­னை­யில் பதினைந்து நாள்­கள் படப்­பி­டிப்பை நடத்தி உள்­ள­னர். காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­ய­போது வடி­வேலு பேசிய வச­னங்­க­ளைக் கேட்டு, ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் சிரித்துக்­கொண்டே இருந்­த­ன­ராம்.

"வடி­வே­லு­வைப் பொறுத்­த­வரை காட்­சி­யைப் பட­மாக்­கும்­போதே திடீரென ஏதா­வது ஒரு வச­னத்தைப் பேசு­வார். மிக இயல்­பா­க­வும் ரசிக்கும்­ப­டி­யா­க­வும் இருக்­கும்.

"அவ­ரி­டம் அந்­தத் திறமை இருக்­கும்­வரை யாரா­லும் அசைக்க முடி­யாது. நானும் பல நகைச்­சு­வைப் படங்­களை இயக்கி உள்­ளேன். வடி­வே­லு­வு­டன் இணைந்து பணி­யாற்­றும்­போது எனது வேலை­யில் பாதி குறைந்­து­வி­டும்," எனப் பாராட்டு­கி­றார் சுராஜ்.

மைசூ­ரில் 20 நாள்­க­ளுக்கு படப்­பி­டிப்பை நடத்த திட்­ட­மிட்­டி­ருந்­த­ன­ராம். ஆனால் இரண்டு வாரங்­க­ளி­லேயே வேலை முடித்து­விட்­ட­னர். இதை­ய­டுத்து மூன்­றா­வது கட்டப் படப்­பி­டிப்பு தாய்­லாந்­தில் நடை­பெறும். படத்­தின் உச்­சக்­கட்ட காட்­சி­களை அங்­கு­தான் பட­மாக்­கு­கின்­ற­னர். தாய்­லாந்­துக்கு அடுத்­த­படி­யாக சென்­னை­யில் மேலும் பத்து நாள்­கள் படப்­பி­டிப்பை நடத்­தி­னால் மொத்­தம் பட­மும் முடிந்­து­வி­டு­மாம்.