பூரிப்பில் ஐஸ்வர்யா

பூரிப்பில் ஐஸ்வர்யா

1 mins read
ed308b53-a422-4902-b15d-ce87727c23fc
-

சினேகாவுடன் இணைந்து நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறு வயது முதலே தாம் சினேகாவின் ரசிகை என்கிறார்.

இருவரும் அண்மையில் ஒரு விளம்பரப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா.

"சிறு வயதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பைப் பார்த்தேன். அன்று சினேகா நடித்த காட்சிகளைத்தான் படமாக்கினர். இப்போது அவருடன் இணைந்து நடித்தது கனவுபோல் உள்ளது. சிறுமியாக அப்போது ஏற்பட்ட உணர்வுதான், இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு அவரைப் பார்த்தபோதும் இருந்தது. அவருடன் இணைந்து நடித்ததை மறக்கவே இயலாது," என்கிறார் ஐஸ்வர்யா.