அனகா: நடனம் என் வாழ்வின் ஓர் அங்கம்

அனகா: நடனம் என் வாழ்வின் ஓர் அங்கம்

2 mins read
6a94f803-d4b5-402a-a087-774515e32957
-

ஒவ்­வொரு படத்­தி­லும் நடிப்­புத் திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான கதா­பாத்­தி­ரங்­கள் அமை­யாது என்­கி­றார் அனகா.

'டிக்­கி­லோனா' படம் மூலம் ரசி­கர்­க­ளின் தூக்­கத்­தைக் கெடுத்த இந்த இளம் நாயகி, தற்­போது தமிழ், மலை­யா­ளப் படங்­களில் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

'நட்பே துணை' படத்­தில் இடம்­பெற்ற 'பேர் வெச்­சா­லும்' பாட­லுக்கு அனகா ஆடிய நட­னம் மொத்த இளை­யர் கூட்­டத்­தி­ட­மும் அவ­ரைக் கொண்­டு­போய்ச் சேர்த்­துள்­ளது.

"எனது நட­னம் சிறப்­பாக இருப்­ப­தாக எல்­லோ­ரும் பாராட்­டு­கி­றார்­கள். நான் முறைப்­படி நட­னம் கற்­றுள்­ளேன். நட­னம் என்­பது என் வாழ்­வின் ஓர் அங்­க­மாக மாறி­விட்­டது.

"நட­னம் இல்­லாத ஒரு வாழ்க்­கையை என்­னால் கற்­பனை கூட செய்ய முடி­ய­வில்லை. நான் நட­ன­மா­டி­யுள்ள பாடல்­களை ரசி­கர்­கள் வெகு­வாக ரசிக்­கின்­ற­னர் என்­ப­தை­விட மிகச்­சி­றந்த பாராட்டு இருக்க முடி­யாது," என்று சொல்­லும் அனகா, தற்­போது மலை­யா­ளத்­தில் 'பீஷ்ம பர்­வம்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். மேலும் தமி­ழில் கார்த்­திக் சுப்­பு­ராஜ் தயா­ரிக்­கும் படத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம்.

இரண்டு நாய­கி­கள் உள்ள கதை­க­ளை­யும் ஏற்­கத் தயா­ராக இருப்­ப­வர், ஒரே படத்­தில் நிறைய நடி­கர், நடி­கை­ய­ரு­டன் நடிப்­ப­தி­லும் ஆர்­வ­மாக உள்­ளார்.

"'பீஷ்ம பர்­வம்' படத்­தில் மம்­முட்டி, நதியா ஆகி­யோ­ரு­டன் நடித்த அனு­ப­வம் அலா­தி­யா­னது. அவர்­க­ளால் எப்­படி பெரிய நட்­சத்­தி­ரங்­க­ளாக உரு­வெ­டுக்க முடிந்­தது என்­பதை அரு­கில் இருந்து கவ­னிக்­கும்­போ­து­தான் புரி­கிறது.

"ஒவ்­வொரு காட்­சிக்­கும் அவர்­கள் மெனக்­கெ­டு­வ­தும் அர்ப்­ப­ணிப்­பு­டன் நடிப்­ப­தும் பிர­மிக்க வைக்­கிறது. அனு­பவ நடி­கர்­களை அரு­கில் இருந்து கவ­னித்­தாலே போதும், நமக்­கும் நடிப்பு வந்­து­வி­டும்," என்­கி­றார் அனகா.

கடந்த காலத்­தில் சுவா­ர­சி­யம் இல்­லாத கதை­களும் கதா­பாத்­தி­ரங்­க­ளும்­தான் அதிக அள­வில் தம்­மைத் தேடி வந்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், பிற­ரு­டன் தம்மை ஒப்­பிட்­டுப் பார்க்­கும் தேவை­யற்ற பழக்­க­மும் இருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"ஆனால் அனு­பவ நடி­கர்­கள் இதற்கு நேர்­மா­றாக உள்­ள­தைக் கவ­னித்­தேன். தங்­களை யாரு­ட­னும் அவர்­கள் ஒப்­பிட்­டுப் பார்ப்­ப­தில்லை. மேலும் வெற்­றி­யும் நட்­சத்­தி­ரத் தகு­தி­யும் ஒரே இர­வில் நமக்­குக் கிடைத்­து­வி­டாது. பல ஆண்­டு­கள் கடு­மை­யாக உழைத்த பிறகு, அதற்­கான பரி­சாக அமை­வ­து­தான் வெற்றி. இந்த ரக­சி­யத்­தைப் இப்­போது புரிந்­து­கொண்­டுள்­ளேன்.

"கவர்ச்­சி­யான வேடங்­களில் நடிக்­க­வும் நான் தயார். ஏனெ­னில் ஒவ்­வொரு படத்­தி­லும் நமக்­குப் பிடித்­த­மான, நம் திற­மைக்­கேற்ற கதை­களும் கதா­பாத்­தி­ரங்­களும் அமை­யாது. எனி­னும் கவர்ச்­சிப் பொம்­மை­யாக திரை­யில் தோன்ற வேண்­டும் என்­றால், நல்ல படக்­கு­ழு­வும் நல்ல சம்­ப­ள­மும் வேண்­டும் என எதிர்­பார்ப்­பேன்.

"மேலும் எந்­த­வொரு பட­மாக இருந்­தா­லும் அதில் ரசி­கர்­க­ளைக் கவ­ரக்­கூ­டிய சில அம்­சங்­க­ளே­னும் இருக்க வேண்­டும். அல்­லது பெரிய நடி­க­ரின் பட­மாக இருந்­தால் நல்­லது. அப்­போது எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­ட­வில்லை என்­றா­லும் கவ­லைப்­ப­ட­மாட்­டேன். ஏனெ­னில், அத்­த­கைய படங்­கள் நம்மை அதி­க­மான ரசி­கர்­க­ளி­டம் கொண்டு போய்ச் சேர்க்­கும்.

"மற்­ற­வர்­க­ளைப் போல் எனக்­கும் விரு­து­கள், சவா­லான பாத்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் மீது விருப்­பம் உண்டு. எனி­னும் எதற்­கா­க­வும் அவ­ச­ரப்­ப­ட­மாட்­டேன். எல்­லாம் தன்­னால் அமை­யும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் அனகா.

, :

  