விஜய்யைப் பாராட்டும் பூஜா

விஜய்யைப் பாராட்டும் பூஜா

1 mins read
cc1b49ec-26e4-4ec5-b95d-480a9c42b536
-

நடி­கர் விஜய்­யைப் போல் கடும் உழைப்­பா­ளி­யைத் தாம் கண்­ட­தில்லை என்­கி­றார் பூஜா ஹெக்டே (படம்).

பாடல், சண்­டைக்­காட்­சி­களில் மட்­டு­மல்­லா­மல், சிறு சிறு நுணுக்­க­மான விஷ­யங்­க­ளி­லும் அவர் கவ­னம் செலுத்­து­வது தம்மை வியப்­பில் ஆழ்த்­தி­யது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"தன்­னு­டன் நடிக்­கும் மற்ற நடி­கர்­க­ளுக்­கும் படத்­தில் முக்­கி­யத்­து­வம் இருக்க வேண்­டும் என்று விரும்­பு­வார் விஜய். அனை­வ­ரி­ட­மும் அன்­பாக இருக்­கும் ஒரு­சில நாய­கர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

"படப்­பி­டிப்­புக்கு அதி­கா­லை­யி­லேயே வந்து மற்­ற­வர்­க­ளுக்­காக காத்­தி­ருப்­பார். மேலும், இயக்­கு­நர் அழைக்­கும் முன்பே கேமரா முன் வந்து நிற்­பார்.

"உச்ச நடி­க­ராக இருப்­ப­வர் இந்த அள­வுக்கு எளி­மை­யான மனி­த­ராக இருப்­பது ஆச்­ச­ரி­யம். பல கதா­நா­ய­கர்­க­ளு­டன் நடித்த அனு­ப­வத்தை வைத்து இதைச் சொல்­கி­றேன். என்­னைப் பொறுத்­த­வரை விஜய்­தான் உண்மையான சூப்­பர் நாய­கன்," என்­கி­றார் பூஜா ஹெக்டே.