உக்ரேன்: தவிப்பில் ஆர்ஆர்ஆர் குழுவினர்

உக்ரேன்: தவிப்பில் ஆர்ஆர்ஆர் குழுவினர்

1 mins read
926e92c4-33ff-43be-baaf-73b9efb83a60
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண். -

'பாகு­பலி' புகழ் ராஜ­மௌலி இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள 'ஆர்­ஆர்­ஆர்' படத்­தின் வெளி­யீட்­டுக்­காக ரசி­கர்­கள் ஆவ­லு­டன் காத்­துக் கிடக்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் அவரோ, உக்­ரே­னில் நடை­பெ­றும் தாக்­கு­தல்­கள் குறித்து கவ­லை­யில் மூழ்கி உள்­ளார்.

இந்­தப் படத்­தின் முக்­கிய காட்சி­கள் சில­வற்றை உக்­ரே­னில்­தான் பட­மாக்­கி­னா­ராம். அப்­போது அந்­நாட்­டின் அழ­கில் மயங்­கிப் போன­தா­கச் சொல்­கி­றார் ராஜ­மௌலி. படப்­பி­டிப்பு நடத்­து­வ­தற்­கான அனைத்து வச­தி­களும் கொண்ட நாடு உக்­ரேன் என்­கி­றார்.

"அங்­குள்ள சில தொழில்­நுட்ப வல்­லு­நர்­களும் எங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றி­னர். மிக­வும் நட்­பா­கப் பேசிப் பழ­கிய அவர்­க­ளின் நிலை என்­ன­வா­குமோ என்று கவ­லை­யாக உள்­ளது. தொலை­பேசி மூலம் அவர்­க­ளி­டம் அவ்­வப்­போது பேசி வரு­கி­றேன்.

"பெரும்­பா­லா­ன­வர்­கள் பாது­காப்­பு­டன் இருப்­ப­தா­கச் சொல்­கிறா­ரா்­கள். எனி­னும் போர்ச் சூழல் கவலை அளிக்­கிறது," என்­கி­றார் ராஜ­மௌலி.

மார்ச் 25ஆம் தேதி வெளி­யீடு காண்­கிறது ஆர்­ஆர்­ஆர். ஜூனி­யர் என்­டி­ஆர், ராம்­ச­ரண் ஆகிய இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

, :   