'எனக்கு கதைதான் முக்கியம்'

'எனக்கு கதைதான் முக்கியம்'

3 mins read
a32d0ebb-4007-4a4d-8403-fd00869523b5
-

எந்­த­வொரு கட்­டத்­தி­லும் பெரிய நட்­சத்­திர நடி­க­ராக வேண்­டும் என்று தாம் விரும்­பி­ய­தில்லை என்­கி­றார் ஆதி.

தமிழ்த் திரை­யு­ல­கில் கட்­டு­டல் கொண்ட நாய­கர்­களில் இவ­ரும் ஒரு­வர். 'சிக்ஸ் பேக்ஸ்' உடற்­கட்­டைப் பெற விரும்­பும் தென்­னிந்­திய நாய­கர்­களும் நாய­கி­களும் முத­லில் ஆதி­யி­டம் ஆலோ­சனை கேட்­ப­து­தான் வழக்­கம்.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக இவர் நடித்த படம் எது­வும் வெளி­யா­க­வில்லை. மனி­தர் எங்கு இருக்­கி­றார், என்ன செய்­கி­றார் என்­ப­தும் தெரி­யாத நிலை­யில், 'நான் எங்­கும் போக­வில்லை, நான்­கைந்து படங்­களில் நடித்து வரு­கி­றேன்' என்று அண்­மைய பேட்­டி­யில் கூறி­யுள்­ளார் ஆதி.

'பார்ட்­னர்' என்ற நகைச்­சு­வைப் படத்­தில் ஹன்­சி­கா­வு­டன் நடித்­துள்­ளா­ராம். அடுத்து, லிங்­கு­சாமி இயக்­கத்­தில் 'தி வாரி­யர்' படத்­தில் வில்­ல­னா­கத் தோன்­று­கி­றார்.

இதை­ய­டுத்து, சுசீந்­தி­ரன் இயக்­கத்­தில் தெலுங்­கில் உரு­வா­கும் 'ஷிவடு' படத்­தில்­ ஆதி­தான் நாய­கன். இதைத்­த­விர, தமி­ழில் மேலும் ஒரு படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

இவ­ரும் நடிகை நிக்கி கல்­ராணி­யும் காத­லிப்­ப­தாக வெளி­வந்த தக­வல் குறித்த கேள்­வி­களை ஆதி வர­வேற்­பது இல்லை. தனிப்­பட்ட விஷ­யங்­கள் குறித்­துப் பேசு­வதை தவிர்க்­கி­றார்.

"என் தொழிலே கதை கேட்­ப­து­தான். தின­மும் கதை கேட்­கி­றேன். படப்­பி­டிப்பு என்­பது எனக்­குப் பிடித்­த­மான விஷ­யம். எனக்­குப் பிடித்­த­மான கதை­கள் பட­மா­கும்­போ­தும் அவை வெற்­றி­பெ­றும் போதும் உற்­சா­க­மாக உணர்­கி­றேன். படங்­கள் தோல்வி அடை­யும்­போது அவற்­றில் இருந்து பாடம் கற்கி­றேன்," என்­கி­றார் ஆதி.

கொரோனா நெருக்­க­டி­யால் உலக மக்­கள் அனை­வ­ருக்­குமே இரண்டு ஆண்­டு­கள் வீணா­கி­விட்­ட­தா­கக் குறிப்­பிடு­ப­வர், தானும் அதற்கு விதி­விலக்­கல்ல என்­கி­றார்.

"அதைத் தவிர மற்ற நாள்­களில் நானும் வழக்­கம்­போல் என் வேலை­க­ளைச் செய்­து­கொண்­டு­தான் இருந்­தேன். ஒவ்­வொரு படத்­துக்­கும் இடையே நான் அதிக இடை­வெளி விடு­வ­தாக சிலர் விமர்சித்­துக்கொண்டே இருக்கி­றார்­கள்.

"அவர்­க­ளின் அறி­வு­ரைப்­படி அதிக படங்­களில் நடிக்க முயற்சி செய்து நான்கு படங்­களை ஒப்புக்­கொண்­ட­போது தான் கொரோனா குறுக்­கிட்­டது," என்­கி­றார் ஆதி.

அவர் குறிப்­பி­டும் நான்கு படங்­களில் ஒரு படம் முடிந்து வெளி­யீடுக்­காக காத்­தி­ருந்­தது. மற்­றொரு படம் 60 விழுக்­கா­டும் இன்­னொன்று 80 விழுக்­கா­டும் நிறை­வ­டைந்த நிலை­யில்­தான், கொரோ­னா­வின் கோரத் தாண்­ட­வத்­தால் திரை­யு­ல­கமே முடங்­கிப்­போ­ன­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அந்­தப் படங்­கள் அனைத்­தும் இப்­போது அடுத்­த­டுத்து வெளி­யாகி வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"தெலுங்­கில் அதிக கவ­னம் செலுத்­து­வ­தா­கக் கூறப்­படு­வ­தும் சரி­யல்ல. நான் எந்த மொழிப் படம் என்­றெல்­லாம் பார்ப்­பதே இல்லை. ஒரு படம் இரு வெவ்­வேறு மொழி­களில் வெளி­யா­வது தயா­ரிப்­பா­ள­ருக்­கு­த்தான் லாபம் தரும்.

"என்­னி­டம் கதை கூற வரும் இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ள­ரும் நான் கால்­ஷீட் ஒதுக்­கும் முன்பே இரு மொழி­களில் வெளி­யி­ட­லாமா? என்­று­தான் கேட்­கி­றார்­கள்.

"எனக்கு இதில் எந்­த­வித ஆட்­சே­ப­னை­யும் இல்லை. படத்­தின் வசூல் அதி­க­ரிக்க இது­போன்ற முயற்­சி­கள் உத­வும்.

"படப்­பி­டிப்­பின்­போதே இரு மொழி­க­ளுக்­கும் அடுத்­த­டுத்து வெவ்­வேறு வச­னங்­க­ளைப் பேசி பதிவு செய்­து­வி­டு­வோம். எனவே, ஆதி கதைக்­குத்­தான் முன்­னு­ரிமை தரு­வேனே தவிர, எந்த மொழி என்­பதை ஒரு கலை­ஞ­னாக நான் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை," என்­கி­றார் ஆதி.

நாய­கன், வில்­லன், குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரம் என எந்­தப் பொறுப்­பைக் கொடுத்­தா­லும் தயங்­கா­மல் ஏற்­றுக்­கொள்­ளும் நல்ல நடி­கர் என்று பெயர் வாங்­கி­யுள்­ளதை பெரு­மை­யாக கரு­து­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், எப்­போ­தும் நடப்­பவை எல்­லாம் நல்­ல­தற்கே எனும் நேர்­மறை சிந்­த­னை­யு­டன்­தான் தாம் செயல்­ப­டு­வ­தா­கக் கூறு­கி­றார்.

இவ­ரது நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான, 'க்ளாப்' படத்­துக்கு விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

"ஒரே மாதி­ரி­யான கதா­பாத்­தி­ரங்­களை ஏற்க எனக்கு விருப்­பம் இல்லை. 'மிரு­கம்' படத்­தில் நடித்­த­தும் முரட்­டுத்­த­ன­மான பாத்­தி­ரங்­கள் மட்­டுமே தேடி வந்­தன. அதே­போல் 'ஈரம்' படம் முடிந்­த­தும் காவல் அதி­காரி கதை­க­ளா­கத் தேடி வந்­தன.

"நாம் ஒரே மாதிரி நடித்­துக் கொண்­டி­ருந்­தால் ரசி­கர்­க­ளுக்கு சலிப்பு ஏற்­பட்­டு­வி­டும். அத­னால்­தான் உச்ச நட்­சத்­தி­ரங்­கள்­கூட, மாறு­பட்ட கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேடு­கி­றார்­கள். நானும் அதற்கு விதி­வி­லக்­கல்ல.

"அத­னால்­தான் நாய­கன், வில்­லன், குணச்­சித்­திர வேடம் என்­றெல்­லாம் பார்ப்­ப­தில்லை. மன­துக்­குப் பிடித்த பாத்­தி­ரங்­கள் என்­றால் தயங்­கா­மல் நடிப்­பேன்," என்­கி­றார் ஆதி.

சம்­பள விஷ­யத்­தில் கறார் காட்­டாத நடி­கர் என்ற நல்ல பெய­ரை­யும் வாங்­கி­யுள்ள இவர், தன் படங்­களை விநி­யோ­கம் செய்­வ­தி­லும் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு உதவி­க­ர­மாக இருப்­ப­தா­கப் பாராட்­டப்­ப­டு­கி­றார்.