'தன் படத்தின் விழாவில் நாயகன் பங்கேற்க வேண்டும்'

'தன் படத்தின் விழாவில் நாயகன் பங்கேற்க வேண்டும்'

1 mins read
16885593-840c-4e26-bd79-0971ce51c2ad
'கள்ளன்' படத்தில் கரு.பழனியப்பன், நிகேதா. -

எழுத்­தா­ளர் சந்­திரா இயக்­கி­யுள்ள படம் 'கள்­ளன்'. இப்­ப­டத்­தின் இசை வெளி­யீட்டு விழா அண்­மை­யில் நடை­பெற்­றது. அதில், படத்­தின் நாய­கன் கரு.பழ­னி­யப்­பன் பங்­கேற்­க­வில்லை. இது சர்ச்­சை­யாக வெடித்­துள்­ளது.

இந்­நி­கழ்­வில் கலந்துகொண்ட இயக்­கு­நர் சீனு ராம­சாமி, கதா­நா­ய­க­னாக உள்­ள­வர் தாம் நடித்த படம் தொடர்­பான நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­கா­தது சரி­யல்ல என்­றார்.

"இந்­தப் படத்­தின் கதா­நா­ய­கன் இயக்­கு­நர் கரு.பழ­னி­யப்­பன் விழா­வுக்கு வந்­தி­ருக்­க­லாம்.

"அவ­ருக்­கும் இப்­ப­டத்­தின் இயக்கு­நர் சந்­தி­ரா­வுக்­கும் இடையே முரண்­பா­டு­கள், பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும் இந்த நிகழ்­வுக்கு வந்தி­ருக்க வேண்­டும்.

"இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு தொடங்­கி­ய­போது கரு.பழ­னி­யப்­பன் அர­சி­ய­லில் இல்லை. இப்­போது பெரிய கட்­சி­யில் இருக்­கி­றார். ஒரு­வேளை தமி­ழக முதல்­வர் மக­னும் நடி­க­ரு­மான உத­ய­நி­தியை நிகழ்ச்சிக்கு அழைத்­தி­ருந்­தால் கரு.பழ­னி­யப்­பன் வந்­தி­ருப்­பார்," என்­றார் சீனு­ரா­ம­சாமி.

இதை­ய­டுத்­துப் பேசிய இயக்­கு­நர் ராஜு முரு­கன், 'கள்­ளன்' மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெறும் என்­றார்.

"தயா­ரிப்­பா­ளர் இதைச் சிறிய படம் என்று சொன்­னார். ஆனால் வெளி­யீடு கண்ட பிறகு இது பெரிய பட­மாக மாறும். சினிமா மீது பெண் எழுத்­தா­ள­ரும் இயக்­கு­ந­ரு­மான சந்­தி­ரா­வுக்கு பெரிய கனவு உள்­ளது.

"பெண் இயக்­கு­நர்­க­ளைப் பொது புத்­தி­யில் இருந்­து பார்க்­கி­றார்­கள். பெரி­யார், அம்­பேத்­கர் வந்த பிற­கும்­கூட அந்­தப் பார்வை இருக்­கிறது. இதைப் படைப்­பு­கள்­தான் மாற்­றும்," என்­றார் ராஜு­ முரு­கன்.