நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக முன்னணி ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில தினங்களில் திருமண நிச்சய தார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு திருமணத் தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆதியின் தந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்றார் நிக்கி கல்ராணி. அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து இருவரும் ஒன்றாக வெளியே வரும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து, இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது கசிந்துள்ள திருமணச் செய்தி குறித்து ஆதி மௌனம் காக்க, நிக்கி தரப்பில் இதை உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை.

