உதவி இயக்குநரை மெச்சிய வெற்றிமாறன்

உதவி இயக்குநரை மெச்சிய வெற்றிமாறன்

1 mins read
9c10f0b3-3133-481b-b536-f49f53ac4cab
'செல்ஃபி' படத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன். -

தனது உதவி இயக்­கு­நரை சுய­ம­ரி­யாதை உள்­ள­வர் என்­றும் திற­மையை வெளிப்­ப­டுத்தி தன்­னி­டம் உத­வி­யா­ள­ரா­கச் சேர்ந்­த­தா­க­வும் பாராட்­டி­யுள்­ளார் இயக்­கு­நர் வெற்­றி­மா­றன். அவ­ரி­டம் பாராட்டு பெற்­ற­வர் மதி­மா­றன். இவர் இயக்கி உள்ள படம் 'செல்ஃபி'.

இதில் ஜிவி பிர­காஷ் நாய­க­னா­க­வும் வர்ஷா பொல்­லம்மா நாய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர். மேலும் வாகை சந்­தி­ர­சே­கர், சங்­கிலி முரு­கன், தங்­க­துரை ஆகி­யோர் முக்­கிய­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பை வெளி­யி­டும் நிகழ்­வில் பேசிய வெற்­றி­மா­றன், இது 'நீட்' தேர்வை மையப்­ப­டுத்தி எடுக்­கப்­பட்­டுள்ள படம் என்­றார்.

"மதி­மா­றன் சுய மரி­யா­தை­யு­டன் இருப்­ப­வன். ஒரு குறும்­ப­டம் எடுத்து என்­னி­டம் வந்­தான். அதைப்­பார்த்து விட்டு அவனை என்­னோடு சேர்த்­துக்­கொண்­டேன். ஒரு நல்ல படைப்பைத் தரக்­கூ­டிய ஆற்­ற­லும் வேக­மும் இருப்­பது தெரிந்­தது. 'ஆடு­க­ளம்' படத்­தில் உத­வி­யா­ள­ராக மதி­யின் பங்கு மிகப் பெரி­யது.

"இப்­போது 'செல்ஃபி' படத்தை 29 நாள்­களில் முடித்து­விட்­டான். இந்­தப் படம் மூன்று மடங்கு லாபம் தரும் என்று தயா­ரிப்­பா­ளர் தாணு பாராட்­டி­ய­போது பெரு­மை­யாக இருந்­தது," என்றார் வெற்றிமாறன்.