இந்தி நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது தெரிந்த விஷயம். அது எவ்வளவு என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
நடிகை தீபிகா படுகோனே அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஒரு படத்துக்கு அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் 30 கோடி ரூபாய். அதிலும், அவரது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டாம்.
சர்ச்சை நாயகி என்று பெயரெடுத்துள்ள போதிலும், கங்கனா ரணாவத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர் கடைசியாக நடித்த படத்துக்கு வாங்கிய சம்பளம் 27 கோடி ரூபாய்.
இந்தியில் மட்டுமல்லாமல், பாலிவுட் படங்களிலும் நடித்து கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்தியில் ஒரு படத்துக்கு 15 முதல் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாராம். கொடுத்த கால்ஷீட்டுக்கு மேல் சென்றுவிட்டால், நாள் ஒன்றுக்கு இவ்வளவு தொகை என்று கூடுதலாக சம்பளம் கேட்கிறார்.
அண்மையில் வெளிவந்த 'கங்குபாய்' படத்தில் நடித்த அலியா பட் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சம்பளம் 23 கோடி ரூபாய்.
அண்மையில் திருமணம் செய்துகொண்ட கத்ரீனா கைஃப் 15 முதல் 25 கோடியும் கரீனா கபூர் போன்ற மூத்த நடிகைகள் அதிகபட்சமாக பத்து கோடி ரூபாய் வரையும் சம்பளம் பெறுகிறார்கள்.
தீபிகா படுகோனே

