'ஜல்சா' படத்துக்கு அமோக வரவேற்பு

'ஜல்சா' படத்துக்கு அமோக வரவேற்பு

1 mins read
df513a6a-de6c-4728-af2e-c63978acd866
'ஜல்சா' படத்தில் ஷெஃபாலி ஷா, வித்யா பாலன். -

சிறந்த நடி­கை­கள் என்று பெயரெ­டுத்­துள்ள வித்யா பாலன், ஷெஃபாலி ஷா இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கும் 'ஜல்சா' இந்­திப்­ப­டம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாகி உள்ளது.

ஒரு சாலை விபத்தை மையப்­படுத்தி இந்­தப் படத்தை உரு­வாக்கி உள்­ள­னர். ஒரு சிறு­மி­யின் மீது கார் மோது­கிறது. ஆனால் அந்த ஓட்­டு­நர் நிற்­கா­மல் சென்­று­வி­டு­கிறார். பிறகு அந்­தச் சிறுமி பல்வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கி­றாள் என்­ப­தாக கதை நகர்­கிறது.

வித்யா பால­னும் ஷெஃபா­லி­யும் தாங்­கள் ஏற்­றுக்­கொண்ட பாத்­தி­ர­மா­கவே திரை­யில் வாழ்ந்து காட்டி­இருப்­ப­தாக ஊட­கங்­கள் பாராட்­டு­கின்­றன. வித்யா காவல்­துறை அதி­கா­ரி­யா­க­வும் ஷெஃபாலி சமை­யல் கலை­ஞ­ரா­க­வும் நடித்­துள்­ள­னர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த செரிபிரல் பால்சி என்ற பாதிப்பு உள்ள பத்து வயதுச் சிறுவன் வித்யாவின் மகனாக நடித்துள்ளான். இப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.