அதிதி: அந்தப் படம் அழகான காவியம்

அதிதி: அந்தப் படம் அழகான காவியம்

1 mins read
23e552c0-85bd-4be0-94ac-3a910c6c16d5
-

'பொன்­னி­யின் செல்­வன்' திரைப்­படம் ஓர் அழகான காவி­யம் என்­கி­றார் அதிதி ராவ்.

இத்­த­னைக்­கும் அவர் அந்­தப் படத்­தில் நடிக்­க­வில்லை. இந்­நிலை­யில் அண்­மைய பேட்­டி­யில், அப்­படத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி உள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"நான் மணி­ரத்­னத்­தின் தீவிர ரசிகை என்று ஏற்­கெ­னவே பல­முறை கூறி­யுள்­ளேன். 'பொன்­னி­யின் செல்­வன்' படம் வெளியான முதல் நாளன்றே அதைப் பார்க்க விரும்­பு­கி­றேன். ரசி­கர்­கள் மத்­தி­யில் அமர்ந்து, கைதட்டி ஆர­வாரத்­து­டன் படத்­தைப் பார்த்து ரசிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"நடி­கை­யாக வேண்­டும் என்ற ஆசை ஏற்­ப­டக் கார­ணமே மணி சார்­தான். அவ­ரது இயக்­கத்­தில் நாய­கி­யாக நடிக்க வேண்­டும் என்­பதே நான் நடி­கை­யாக முக்­கி­யக் கார­ணம்.

"அவ­ரைத்­தான் எனது குரு­வா­க­வும் கரு­து­கி­றேன். அவ­ரது அடுத்த படத்­தில் ஒப்­பந்­தம் செய்­வார் என்ற எதிர்­பார்ப்­பில் பாராட்­ட­வில்லை.

"அவ­ரது அடுத்­த­டுத்த படங்­களில் இருப்­பேனா என்­பது தெரி­யாது," என்­கி­றார் அதிதி.