ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்த படம் 'கனா'. சிறு கிராமத்தில் பிறந்த நடுத்தர வீட்டுப்பெண் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க நடத்தும் போராட்டம்தான் கதை. இப்படத்தை சீன மொழியில் 'இந்தியன் கேர்ள்' என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இப்படம் அங்கு வெளியீடு கண்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்துக்குப் பின்னர் சீனாவில் வெளியீடு கண்டுள்ள இரண்டாவது தமிழ்ப் படம் இதுவாகும்.
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'வீட்ல விசேஷங்க' படம் எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 'பதாய் ஹோ' என்ற இந்திப் படத்தின் மறுபதிப்பாக உருவாகும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்க ளில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலை யில், இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளி யிட்டு படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளனர்.
அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் 'ஏகே 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதும் அனிருத் இசையமைப்பதும் உறுதியாகி உள்ளது. இதை அப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர் பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், இப்படியொரு வாய்ப்பை அளித்தமைக்காக அஜித் சாருக்கு நன்றி என்றும் தன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் படம் என்றாலே இசைக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று அனிருத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விக்ரம் பிரபு நடித்துள்ள 'டாணாகாரன்' திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு காண்கிறது. தமிழ்
இயக்கி உள்ள இந்தப் படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர், அன்பரசன்
உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவல்துறை பயிற்சியின்போது இளையர்கள் எத்தகைய கடினமான சூழலை எதிர்கொள்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இப்படம். இதில் விக்ரம் பிரபு கோபமும் வேகமும் நிறைந்த இளம் பயிற்சிக்காவலராக நடித்துள்ளார். மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் மூத்த அதிகாரிகளை துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் இளையராக, தாம் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே விக்ரம் பிரபு மாறிவிட்டதாகச் சொல்கிறார் இயக்குநர்.
படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

